பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. திருவலிதாபம் 23?

உடையார் பெரியார் என உள்கும் உலகோரே' என்று அறிவித்துள்ளனர்.

இப்பதிகத்தில் உபதேச முறையில் அமைந்த் பாடல்கள் இரண்டு. அவையே,

ஐயன் நொய்யன் அணியன் பிணி இல்லவர் என்றும்

(தொழுதேத்தச் செய்யன்வெய்ய படைஏந்த வல்லான்திருமா

(தொடுறைகோவில் வையம்வந்து பணியப்பிணிதீர்த் துயர்கின்ற வலிதாயம் உய்யும்வண்ணம் நினைமின்நினைந்தால் வினைதீரும்

(நலம்ஆமே'

ஆசிஆர மொழியார் அமண் சாக்கியர் அல்லாதவர்கூடி

ஏசிஈரம் இலராய்மொழி செய்தவர்சொல்லைப்

(பொருள் என்னேல் வாசிதீர அடியார்க்கருள் செய்துவளர்ந்தான் வலிதாயம் பேசும்ஆர்வம் உடையார் அடியார் எனப்பேனும்

(அடியாரே' என்பன,

'உள்நிறைந்த பெருமான்கழல் ஏத்தநம் உண் மைக் கதிஆமோ என்பதும் உபதேச மொழியே.

ஐயன் - அழகான தலைவன். நொய்யன் - நுட்ப மானவன், அணியன் - நெருக்கமானவன், செய்யன் . செந்நிறத்தவன். வெய்ய - கொடிய- படை - ஆயுதம், திருமாது அழகிய உமையம்மை. உறை வாழும். வையம் - உலக மக்கள். உய்யும் வண்ணம் - ஈடேறும்படி ஆசி- ஆசீர்வாதம், ஈரம் . அன்பு வாசி - வேற்றுமை. பேணும் - போற்றும்,