பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. வடதிருமுல்லைவாயில்

சோழ நாட்டில் திருமுல்லைவாயில் என்னும் ஒரு தலமுள்ளது, அது தென் திருமுல்லைவாயில், அதற்கு வடக்கே இத்தலம் இருத்தலின் இது வட திருமுல்லைவாயில் எனப்பட்டது. இத் தலத்தின் சிறப்பு முல்லை மலரினுல் அமைதலின், இது முல்லை. வாயில் எனப்பட்டது. சண்பகாரண்யம் என்றும் இதனைக் கூறுவர். முல்லைக்கொடி இங்கு விசேடம் என்னும் குறிப்புச் சுந்தரர் பாடியுள்ள இத் தலத்துப் பதிகத்தின் பத்தாவது பாடலின் வழி நன்கு தெளி வாகின்றது. அதாவது தொண்டைமான் இங்கு வேட்டை ஆட வந்தனன். அதுபோது அவனது யானே முல்லைக் கொடியில் சிக்கிக் கொண்டு மேலே அடியெடுத்து வைக்க முடியாமல் தத்தளித்தது. அதனைக் கண்ட தொண்டைமான் தனது வாளில்ை முல்லைக் கொடிகளைச் சேதித்தனன். அப்படிச் சேதித்த போது இறைவர் அங்குத் தோன்றிக் காட்சி அளித்தனர். அவனுக்குத் திருவருளும் புரிந்தனர். இந்தக் குறிப்புத்தான்,

சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச்

சூழ்கொடி முல்லையால் கட்டிட் டெல்லையில் இன்பம்.அவன்பெற வெளிப்பட் டருளிய இறைவனே என்றும் நல்லவர் பரவும் திருமுல்லை வாயில்

நாதனே நடைவிடை ஏறி பல்கலைப் பொருளே படுதுயர் களேயாய்

பாசுப தாபரஞ் சுடரே'

என்னும் பாட்டில் பெறப்படுகிறது,

சொல்லரும் - சொல்லி முடியாத களிற்றை - யானையை, எல்லை . அளவில்லாத. பரவும் - போற்றும், நரைவிடை - வெள்ளிய எருது,