பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. ಖ-ಅg.ಮಹಿ೦ar೨ನು 235

இங்குள்ள இறைவர், தொண்டைமான் வீசிய வாளில்ை சிறிது தாக்கப்பட்டதை இன்றும் இலிங்கத்தில் காணலாம். அப்பகுதி சந்தனக் காப்பினுல் மறைக்கப்பட்டுள்ளது. இறைவர் தீண் டாத் திருமேனியுடையர் என்றும் கூறுவர்.

முருகப் பெருமான் இத் தலத்து இறைவரைப் பூசித்துப் பேறு பெற்றுள்ளார். இங்குள்ள கோயிலுள் இரண்டு எருக்கமரத் துரண்கள் உள்ளன. இவை தொண்டைமான் சக்கரவர்த்தி யால் கொடுக்கப்பட்டவை. முருகப் பெருமானே அன்றிச் சோழன். பிரமன், இந்திரன், ஐராவதம், திருமால், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், துர்வாசர், பிருகு, சித்ரகருமன், சம்புதாசன், குச லவர், சுாமதேனு, வசிட்டர் முதலியோரும் பூசித் துள்ளனர். இது பெரிய கோவில், இதன் கோபுரமும் பெரியது. இங்குள்ள நந்திதேவர் தொண்டைமான் சக்கரவர்த்திக்குப் போரில் துணையாகச் சென்றனர் என்றும் கூறுவர். இதனுல் இங்குள்ள நந்தி, துவஜஸ்தம்பத்தைப் (கொடி மரந்தை) பார்த்த வண்ணம் இருத்தலையும் கண்டு மகிழலாம். இரஷட உற்சவ மூர்த்தியும் இக் கோவிலில் உண்டு. கோவிலுக்குத் தெற்கே பச்சை அம்மன் கோவில் ஒன்று உளது. இவ்வம்மை சக்தி வாய்ந்தவள். இறைவரது திருப்பெயர் மாதிலாமணி ஈஸ்வரர், பாசுபத ஈஸ்வரர் என்பன. இறைவியார் பெயர் கொடி இடை நாயகியார் என்பது. இதனைச் சுந்தரர் கொடி இடை உமையவள் எனத் தம் இரண்டா வது பாடலில் குறிப்பது கொண்டு தெளியலாம். இங்குள்ள தீர்த்தம் பாலாறு, சுப்பிரமணிய தீர்த்தம் என்பன. பாலாறு இத்தல வழியாகச் சென்று இது போது வறண்ட மணல் வெளியாக இருப்பதை, இன்றும் காணலாம். இங்குள்ள இறைவியாரின்