பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

இப்பதிகத்தில் உபதேச முறையில் அமைந்த பாடல் ஒன்று உண்டு. அது,

பரக்கி குர்படு வெண்தலை யில்பலி

விரக்கி குன் உறை வேற்காட்டுச் அரக்கன் ஆண்மை அடரப்பட் டான் இறை நெருக்கி குனே நினைமீனே’’. w

என்பது. -

திருஞான சம்பந்தர், தம் தமிழைச் செந்தமிழ் என்றும், அத் தமிழால் இறைவரைப் பாட நல்ல குணங்கள் உண்டாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இப் பதிகத்தில் சமண பெளத்தர்களைப் பற்றிய குறிப்பு இல்லை. -

'ஆடல் நாகம் அசைத்தள வில்லதோர்

வேடம் கொண்டவன் வேற்காடு பாடி யும்பணிந் தார் இவ் உலகினில் சேடர் ஆகிய செல்வரே",

-முதல் திருமுறை

இத்தலத்து முருகன்மீது பாடிய திரும்புகழ் இரண்டு. அவற்றுள் ஒன்று,

பரக்கினர் - அலைந்து திரிந்தவர்கள் (பிரம விஷ்ணுக் கள்). படு - இறந்த வெண்தலை . மண்டை ஒடு. பலி. பிச்சை. விரக்கிளுன் - சாமர்த்திய முடையவன். அரக்கன் . இராவணன். ஆண்மை . செருக்கு, வீரம், அடர் அழிதல். இறை - சிறிது. ஆடல் படம் எடுத்து ஆடும். அசைத்து . இடுப்பில் கச்சாகக் கட்டி. சேடர் பெருமையுடையவர்.