பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 தொண்டைநாட்டுப் ப8 டல் பெற்ற சிவதலங்கள்

24. மயிலாப்பூர்

இது மயிலாப்பூர், திருமயிலை எனவும் வழங்கப் பெறும். இறைவி இறைவரை இங்கு மயிலாக வடிவு. கொண்டு பூசித்த காரணம்பற்றி இப்பெயர் பெற்றது. அப்பர் இத்தலத்தை மயிலார்ப்பு என்று குறிப்பிடு கின்றர். மேலும் அவர் இவ்வூர் மேகமும் சந்திர னும் தவழக்கூடிய அவ்வளவு உயரமான மாடங்களே (வீடுகளை) உடையது என்றும், நல்ல மாட வீதிகளே யுடையது என்றும், குறிப்பிட்டுள்ளார். இதனே, 'மங்குல் (மேகம்) மதி தோயும் மாடவீதி மயிலாப்பு" என்னும் அவர்தம் திருவாக்கால் உணரவும். மயி லின் ஒசை மிகுதியும் இவ்வூரில் இருந்ததால் மயி லார்ப்பு எனவும்படும். ஆர்ப்பு என்பது ஒசை. ஊரின் பெயர் மயிலை. கோவிலின் பெயர் கபாலீச்சுரம். அம் மையார் மயிலாகப் பூசிப்பதை வடக்கு வெளிப் பிராகா ரத்தில் புன்னே மரத்தடியில் உள்ள சிறு கோவிலில் இன்றும் கண்டு களிக்கலாம் பூசையின் பயனுக அம்மையார் மயிலுருவம் நீங்கிச் சுயவடினில் இறை. வரை மணந்தனர். இராமபிரானும் இத்தலத்தை வழிபட்டு ஐப்பசி ஒணத் திருவிழா நடத்தியதாக அறியப்படுகிறது. ஒணத் திருவிழா நடந்த குறிப்பு. “ஐப்பசி ஒணவிழாவும் அருந்தவர்கள் துய்ப்பனவும்: என்று திருஞானசம்பந்தர் தம் பதிகத்திலும் குறிப்பிட். டுள்ளனர். ஒண விழாவே அன்றிக் கார்த்திகை தீப விழாவும், மார்கழி திருவாதிரை விழாவும், தைப்பூச விழாவும், மாசி மக விழாவும், பங்குனி உத்திர விழா வும், (இவ்விழா இதுபோதும் மிகமிகச் சிறப்பாக இங்கு நடத்தப்படுகிறது. மூன்ரும் நாள் அதிகார நந்தி சேவையையும், ஐந்தாம் நாள் இரடபவாகன சேவை யையும், ஏழாம்நாள் தேர்விழாவையும், எட்டாம்நாள் அறுபத்துமூவர் விழாவையும், பத்தாம் நாள் புன்னே மரத்தடியில் இறைவிபூசித்து மணம்செய்துகொண்ட விழாவையும், கண் களிக்கக் கண்டு மகிழவேண்டிய