பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

  • திருமயிலாப்பில் உள்ள திருப்பூம்பாவை’ என்னும் வரி காணப்படுகிறது. இதல்ை பூம்பாவை உருவு கோவிலில் இருந்த உண்மை புலனுகின்றது. சாந் தோமில் காணப்பட்ட சிறுசிறு கல் வெட்டுகள் வழி இதுபோதுள்ள கபாலிச்சுரம் அந்த இடத்தில் இருந் திருக்கவேண்டும் என யூகிக்க வேண்டி இருக்கின் றன. இந்த உண்மையினைத் திருஞானசம்பந்தர் திருவாக்காம்"ஊர்திரை வேலை உலாவும் உயர்மயில: எனும் வரிகொண்டு முன்பே நிலைநிறுத்தப்பட்டது. இதல்ை சாந்தோமில் இருந்த கிறிஸ்தவர் இக் கோவிலே அழித்து மாதா கோவிலாகக் கட்டிக்கொண் டனர் என்று கருத இடன் இருக்கிறது. இது மேலும் ஆராய்தற்கு உரியது. இப்படிஎல்லாம் காண்கிற போது இதுபோதுள்ள கபாலீசுவரர் கோவில் சம்பந் தர் காலத்தது அன்று என்பது பெறப்படுகிறது. இது போதுள்ள இறைவர் கோவிலிலும், இறைவியார் கோவிலிலும் சிற்சில கல்வெட்டுகள் ஒன்றுக்கொன்று தொடர்பின்றிக் காணப்படுகின்றன.

மயிலாப்பூருக்கு அடுத்துள்ள திருவல்லிக்கேணி மயிலைக்கு உள்பட்டது என்னும் உண்மையினைத் திரு மழிசை ஆழ்வார், "நீள்ஒதம் வந்தலேக்கும் மாமயிலே மாவல்லிக்கேணி என்று பாடுதலால் அறியலாம். இவரே அன்றி, திருமங்கை ஆழ்வாரும் இந்த உண் மையினே தேன் அமர்சோலை மாட மாமயிலைத் திரு வல்லிக்கேணி 'மாட மாமயிலைத் திருவல்லிக் கேணி என்றே பாடி யுணர்த்தி யுள்ளனர். w

திருமயிலைக் கபாலீச்சுரர் கோவில் நவராத்திரி உற்சவத்தையும், அதுபோது நவராத்திரி மண்டப. அலங்காரத்தையும் கண்டு களித்தல் வேண்டும். இறைவியாரின் திருக்கோயில் தெற்கு நோக்கியும் இறைவர் மூலட்டானம் மேற்கு நோக்கியும் அமைந் துள்ளன. - • - --