பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. மயிலாப்பூச் 255夏

திருமயிலையில் கபாலிச்சுரர் கோவிலே அன்றி, மற்றும் சில கோவில்களையும் கண்டு தரிசித்தல் வேண்டும். தெற்கு மாடவீதியில் வெள்ளீஸ்வரர் கோவில் உண்டு. சுக்கிரன் பூசித்த தலம். தேவியார் காமாட்சி அம்மையார். இக்கோவில் விழா சித்திரை யில் நடைபெறும். திருமயிலேக் கபாலீச்சுரம், சென்னே எழும்பூரிலிருந்து நாலு கல் கடந்தாலும், சென்ட்ரலிலிருந்து நான்கு மைல் கடந்தாலும் அடை யலாம். பஸ் வசதி உண்டு.

இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் ஒன்றே உளது. இது கலி விருத்தத்தால் ஆனது. இதன் இலக்கணம் முன்பே கூறப்பட்டது. இதன் பண் சீகாமரம். இதனை இக்காலத்து நாத நாமக்கிரியை இசை என ஒருவாறு கூறலாம். இப் பதிகத்திற்கும் திருஞானசம்பந்தர் வாழ்க்கை வரலாற் நிற்கும் தொடர்பு உண்டு. அதாவது, இது பூம்பா வையை எழுப்பப் பாடிய பதிகமாகும். இந்தக் கதைக்

குறிப்பு முன்பே கூறப்பட்டது.

திருஞானசம்பந்தர் இத்தலத்தில் பாடிய 'மட்டிட்ட” என்று தொடங்கும் பதிகம், இறைவரை நோக்கிப் பாடப்பட்டதாக அமையாமல், இறந்து சாம்பரும் எலும்புமாக இருந்த பூம்பாவையை நோக் கிப் பாடியதாக அமைந்துளது. இதனைச் சிறப்புடன் நோக்குதல் வேண்டும். ஆகவே, இப்பதிகம் கையறு நிலைப்பதிகம் போன்றது என்னலாம். கையறு நிலையாவது இறந்தவர்களிடத்தில் அன்புடையவர் கள் வருத்தப்பட்டுப் பாடுவதாகும். இதனைப் பதிகத் தின் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் காணுதே போதியோ காணுதே போதியோ’’ என்று வருதலே நன்கு நோக்குக. இத் தொடரைப் படிக்கும்போது நமக்கே எத்துணை இரக்கம் தோன்றுகிறது! இந்த உண்மையினே உணராமல் இப் பதிகம் இன்பப்