பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

حين تم

என்னும் வரி உணர்த்துகிறது. பலியாவது திசை தோறும் நடத்தப்படும் உருத்திர பூசை.

எட்டாவது பாடல், சிவகணங்கள் பதினெட்டும் சித்திரை மாதம் அட்டமி திதியில் விழாக் கொண்டாடுவதைக் கானேதே போதியோ என்று அறிவிக்கிறது. இதனைப் 'பண்ணுர் பதி னெண்கணங்கள் தம் அட்டமி நாள் கண்ணுரக் காணுதே போதியோ பூம்பாவாய்' என்னும் வரியால் அறியலாம்.

ஒன்பதாவது பாடல், பொன் ஊஞ்சல் விழாவைக் காணுமல் போகின்ருயோ என்பதை உணர்த்தி திற்கிறது. இதனைப் பொற்ருப்புக் (அழகிய கயிறு கட்டித் தொங்கவிடப்பட்ட ஊஞ்சல் விழாவை) காணுதே போதியோ பூம்பாவாய்' என்னும் வரி குறிக்கிறது. தாப்பாவது, கயிறு. -

பத்தாவது பாட்டுச் சமணர்களும் பெளத்தர் களும் இழித்துப் பேசப் பவித்திரோஸ்வம் (விட யாத்திவிழா) நடைபெறுவதைக் காணுது போதியோ என்பதை அறிவிக்கின்றது, பெருஞ்சாந்தி என்பத குல் ஆனி முதல் ஆவணி வரை நடந்தது என்ப தையும் ஒருவாறு ஊகிக்கலாம். இதனைப் பெருஞ் சர்ந்தி காணுதே போதியோ பூம்பாவாய்' என்னும் வர் கொண்டும் தெரியலாம். மகேசுர பூசை இம் மாதங்களில் நடந்தது என்று முன்பு கூறப்பட்டதை யும் பொருளாகக் கொள்க. -

இப் பதிகம் பூம்பாவைப் பாட்டு என்று திரு. ஞானசம்பத்தரால் குறிக்கப்பட்டுள்ளது. இதனே அவர் தேன்அமர் பூம்பாவைப் பாட்டாக” என்று: கூறுதல்கொண்டு தெளிக. இதற்குக் காரணம் பாடல்தோறும் பூம்பாவாய் என்று வருதலே ஆகும். இப்பதிகத்தின் சிறப்பைக் கூறும்போது சம்பந்தர்