பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. மயிலாப்பூர் 26 :

தம்மைச் செந்தமிழான் ஞானசம்பந்தன்' என்று கூறிக்கொள்கின்றனர். இப் பத்துப் பாடல்கள் நலம் புகழ் பாட்டு என்றும், இதனைப் பாடவல்லவர் வான சம்பந்தம் பெறுவர் என்றும் அவர் கூறியுள்ளனர்.

இப்பதிகத்தின் உள் கருத்து, அடியார்கட்கு அன்னம் இடுதலும், அவ் விழாவைக் கண்ணுரக் காணுதலும் பிறவி பெற்றதன் பயன் என்பதாகும்.

இந்த இரண்டையும் ஆணையாக வைத்தே எலும்பைப் பெண்ணுக்கினர் திருஞானசம்பந்தர் என்பதைச் சேக்கிழார்,

'மண்ணி னில்பிறந் தார்பெறும் பயன்மதி சூடும் அண்ண லான் அடி யார்தமை அமுதுசெய் வித்தல் கண் ணி ஒல் அவர் நல்விழாப் பொலிவு கண் டார்தல் உண்மை யாம் எனில் உலக முன் வருகென உரைப்பார்’ என்று பாடி உணர்த்தியுள்ளனர்.

அப்பர் சுவாமிகள், இத்தலத்து இறைவர் மீது பாடிய பதிகம் கிடைத்திலது. ஆனல், இத்தலத்தின் பெயரைக் குறித்துள்ளார். புக்க திருத்தாண்டகத்தில் 'மங்குல் மதி தவழும் மாடவீதி மயிலாப்பில் உள் ளார்" என்றும் திருஒற்றியூர்த் தாண்டகத்தில் 'எதிர் கண்டோம் மயிலாப்புள்ளே' என்றும் பாடி இருப்ப தால் இந்த உண்மையை உணர்க.

திருநாவுக்கரசர் பாடியுள்ள திருக்கழுக்குன்றத் தாண்டகப் பதிகத்தில் இரண்டே தாண்டகங்கள் உள்ளன. அவற்றுள் முன்னேயது திருக்கழுக்குன்றப் பெருமானைப் பற்றியது. மற்ருென்று திருமயிலேக் கபாலீசுரரைப் பற்றியதாக இருக்கலாமோ? என்று சிந்திக்க வேண்டி இருக்கிறது. அத்தாண்டகம்,

மதி . சந்திரன். அண்ணலார் . சிவபெருமான். அமுது செய்வித்தல் - உண்பித்தல். பொலிவு , சிறப்பு, விளக்கம். ஆர்தல் - நிறைவு உறுதல்.