பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர் பாடிய பதிகங்கள் இரண்டும், அப்பர் பாடிய பதிகம் ஒன்றும் ஆக மூன்று பதிகங்கள் உண்டு.

திருஞான சம்பந்தரின் முதல் பதிகம் கலிநிலைத். துறையால் ஆனது. பண், இந்தளம். இவ்விரண்டன் விளக்கமும் முன்னர்க் கூறப்பட்டன. ஆண்டுக் காண்க. இரண்டாவது பதிகம் தரவு கொச்சகத்தால் ஆனது. இதன் பண் காந்தார பஞ்சமம். இவற்றின் விளக்கமும் முன்னதாகக் கூறப்பட்டுள்ளது. அப்பர் பதிகம் கலிவிருத்தத்தால் ஆனது. இதன் இலக் கண மும், பண்ணும் முன்னரே கூறப்பட்டன.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவரை நோக்கிப் பல விளுக்களை வினவும் முறையில் தம் முதல் பதிகத்தில் பாடியுள்ளார். இக் குறிப்பைப் பாடல்களில் "உலகாளுடையீர் சொலீர். சிலம்பார்க்க வும் வல்லீர் சொலீர், அடிகேள் சொலீர், ஆடல் உகக்க வல்லிர் சொலீர், சரிதைத் தொழிலீர் சொலீர், சூதுலாவிய கொங்கை ஒரு பங்குடையீர் சொலீர், தொல் அழலீர் சொலீர், வீற்றிருந்தீர் சொலீர், இரு வர்க்கும் அறிவரியீர் சொலீர், பொடி பூசிய மேனியிர் சொலீர் என்று விளுவுதல் கொண்டு தெளியலாம். இது குறித்தே திருஞான சம்பந்தர் இப்பதிகத்தை, *வின உரை பதிகம் என்று உணர்த்தும் முறையில், 'வினுவுரை ஒதி என்று தமது திருக்கடைக்காப்பில் குறிப்பிடுகின்றனர். --

ஆர்க்கவும் . ஒலிக்கவும். அடிகேள் - பெரியீர். உகக்க - விரும்ப, சரிதை - திரியும் சூதுலாவிய கொங்கை . சொக்கட்ட ன் காயைப் போன்ற முலைகளுடைய உமாதேவி. தொல் கழலீர் - பழைய வீரத் தண்டை அணிந்த திருவடி புடையீர். அறிவரியிர் . பிரம்மன் திருமால் ஆகிய இருவர் களால் அறிய முடியாதவரே. வானவர் - தேவர். பொடி . விபூதி. மேனி . உடல்,