பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. திருக்கச்சூர் ஆலக்கோயில் 2.79

திருக்கச்சூர் ஆலக் கோயிலில் சோழர், பாண்டி யர், விஜய நகரவேந்தர், சாளுக்கிய மன்னர்களின் கல்வெட்டுகள் உண்டு.

இக்கல்வெட்டுகளின்வழி நாம் அறிவன: இறை வருக்குத் திருஆலக் கோயில் உடையார் என்னும் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. இத்தலத்துக்கு நித்த விநோத நல்லூர் என்னும் பெயரும் உண்டு. இது செயங்கொண்ட சோழ மண்டலத்துக் களத்துார்க் கோட்டத்தில் செங்குன்ற நாட்டுத் திருக்கச்சூர் என்று கூறப்பட்டுள்ளது. நித்தவிநோத நல்லூர் என்னும் பெயரும் இத்தலத்திற்கு இருந்ததாகத் தெரிகிறது. மூன்ரும் குலோத்துங்க சோழ தேவரது கல்வெட்டு, திருநாவுக்கரசுதேவருக்கு உருவம்செய்து அமைத்த செய்தியை அறிவிக்கிறது. இவனது முப்பத்து முன்ரும் ஆண்டில் நித்திய வர்மன் கட்ட ளேப்படி இத் தலத்து இறைவருக்கு அறுபத்தேழு வேலி நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டானின் முப் பத்தாரும் ஆண்டில், செங்குன்றமாகிய அருமொழி தேவ நல்லூரிலும் இத்தலத்திற்கு நிலங்கள் விடப் பட்டுள்ளன. .

ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டு, தேவாரத்து (வழிபாட்டிற்குரிய) ஈஸ்வரம் உடையார் திருக்கோயிலையும், மணற்குடி என்னும் ஊர், திருக் கச்சூர் ஆலக் கோயில் உடையார்க்குத் தேவதான மான ஊர் என்பதையும் அறிவிக்கிறது.

இங்குள்ள கல்வெட்டு மூலம் சில அரிய குறிப்புகள் காணப்படுகின்றன. சாத்தனர் என்பவர் முத்தமிழ் ஆசிரியர் என்பதும், அவரது தமிழ்ப் புலமை பெரிதும் போற்றத்தக்கதாக இருந்தது என்பதும், அவரது மரபைச் சார்ந்த பெருநம்பி என் பார், பொய்யாமொழி மங்கலம் என்னும் ஊரைக்