பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

289 தோண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

காணியாக உடையார் என்பதும், திருக்கச்சூர் கடிகை ujrflä (Learned Assembly) 52(56.1773; #55gift தார் என்பதும் அவ்வரிய குறிப்புகளாகும்.

மற்ருெரு கல் வெட்டின் வழி, (அதாவது சக்ரவர்த்தி இராஜ ராஜ தேவரின் எட்டாம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு) எண்ணெய் வணிகர்களான செக்காளர்கள் காஞ்சிமா நகரத்தில் உள்ள திருக் காட்டுப் பள்ளி உடையார் கோவிலில் கூடி, திருக் கச்சூர் செக்காளர்கள், திருக்கச்சூர்க் கோயிலுக்குத் திருவிளக்குக்கு எண்ணெய் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்ததை அறியலாம், - -

திருக்கச்சூர் ஆலக் கோயிலுக்குச் சுந்தரர் பாடிய பதிகம் ஒன்றே உளது, இஃது எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தத்தால் ஆனது. பண், கொல்லிக் கெளவானம். இதனே இக்காலத்து நவரோசு இசை போன்றது என்னலாம். இப் பதி கத்தில் “தொழுவார்களின் கவலே ஒழிப்பவன், மாலை மதியமாய் இருப்பவன், மலேமேல் மருந்து, பிறவாத வன், இறவாதவன், முதுமை அடையாதவன், கல்லால் விருட்சத்தின் கீழ் அறம் உரைத்தவன், பொய்யாகப் புகழ்ந்தாலும் அதனையும் புகழாகக் கொள்பவன், செந்நிறத்தன், வெண்ணிறத்தன், ஞானக் கண்ணன், ன நினைக்கின்றவர்களை நினைப்பவன், காலே எழுந்து தொழுவார் தங்கள் கவலை களேவான்’ என்று இத்தலத்து இறைவர் சிறப் பிக்கப்பட்டுள்ளனர். .

இப்பதிகத்தில் இறைவர் பிச்சை ஏற்ருல் அடி யார்கள் கவலைப்படுவர் என்பது, "தலையில் பலிநீ கொள்ளக் கண்டால் அடியார் கவல்வார் என்றும், பலிக்கு என்று உச்சம் போதா ஊர் ஊர் திரியக் கண்டால் அடியார் உருகுவார் என்றும், பாடி