பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. திருக்கச்சூர் ஆலக் கோயில் 28

உணர்த்தப் பட்டுள்ளது. இவ்வாறு இறைவர் செய் வதன் குறிப்பை நம்மால், அறிய முடியாது என்பதை யும், அதுவே யாம் ஆறு இதுவோ’ என்றும் "இச்சை அறியோம்' என்றும் அறவே ஒழியாய்” அடியார் இருக்க ஐயம் கொள்வது அழகிதே' என்றும் பாடி உருகி உள்ளனர்:

இறைவர் சுடலையில் ஆடும் அழகை, முதுவாய் ஒரி கதற முது காட்டு எரிகொண்டு ஆடல்' என்று குறிப்பிடுகிருர். அவருடைய திருவடிகளில் கழலும் சிலம்பும் ஒலிக்கின்றன என்பதும் (இறைவன் அப்ப ஞகவும், அம்மையாகவும் ஒரு சேரக் காட்சி அளித் தலின் இவ்வாறு கூறப்பட்டது. ஆண்கள் கழல் அணிவர். பெண்கள் சிலம்பு அணிவர்.) கூறப் பட்டுள்ளது. -

சுந்தரர் தம்மைப் பற்றிக் கூறுகையில் தாம் பல கோயில்களில் சென்று வணங்கியதால் பெற்ற பேற்றை, சாலக் கோயில் உள நின் கோயில் அவை என் தலைமேல் கொண்டாடி, மாலேத் தீர்ந்தேன், வினேயும் தீர்ந்தேன்' என்று குறிப்பிடு கின்றனர். இத்துடன் இன்றி மேலும் தம்மைப் பற்றிக் கூறுகையில் மதவேன் அடியேன்” என்றும் 'ஊனப் பெருக்கி உன்னே நினையாது ஒழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்' என்றும், "உன்ன உன்னும் மனத்து ஆரூரன்' என்றும் ஆரூரன் (திரு வாரூர்த் தியாகர்) பேர் முடிவைத்த மன்னு புலவன் வயல் நாவலர்கோன் ' என்றும் கூறிக் கொள் கின்றனர்.

ஒரி - நரி, காட்டில் . சுடுகாட்டில். சால - மிகுதி. மாலே மயக்கம், இனின் உடல்: செடியேன் . கீழ்மை அபுடையவன். உன்ன-நினேக்க. விடை எருது. ஏர்-அழகிய.