பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

திருவேகம்பத்தை அடைந்தாலும், கண்டாலும் துன்பம் ஒழியும் என்பதையும்

கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே ' ஏகம்பம் காண இடர் கெடுமே ' என்று மொழிந்துள்ளார்.

காஞ்சிபுரத்தின் சிறப்பைக் கூறும்போது,

கடிபொழில் கச்சி ’’ குருந்த மல்லிகை கோங்குமாதவி நல்ல குராமரவம் திருந்து பைம்பொழில் கச்சி ’’ 'விண் அமர் நெடுமாடம் ஓங்கி விளங்கிய கச்சிதன்னுன்

திண்ண மாம் பொழில் சூழ்ந்த ஏகம்பம் ' : மாலை வெண் மதி தோயும் மாமதில் கச்சிமா நகருள்

ஏலம் நாறிய சோலை சூழ் ஏகம்பம் ' சேடர்சே கலிக்கச்சி ஏகப்பம் மாகம் தோய் மணிமாடம் மா மதில் கச்சிமாநகர்" சேணுலாம் பொழில் கச்சி ஏரிஞர் பொழில் சூழ்ந்த கச்சி ’ என்று சிறப்பித்துக் கூறியுள்ளனர்.

ாஞ்சிபுரம்,நல்ல கொடையாளர்களைக் கொண் டது என்பதையும், கரவில் வண்கையினர்கள் வாழ்

லிக் கச்சிமாநகர்' என்று சுட்டியுள்ளனர்.

கடி வாசனே. பொழில் - சோலே. கச்சி - காஞ்சிபுரம், குருந்தம் முதலியன மலர்களின் பெயர்கள், விண்-ஆகாயம். திண் ணமாம்.உறுதியாம், மதி.சந்திரன், மா-பெரிய. ஏலம். ஏலக்காய். நாறிய. மணம் வீசிய, சேடர்-எல்லாம் அழியத் தாம் அழியாது இருப்பவராகிய சிவபெருமான், கலி - ஒலி, சேண், மாகம் - ஆகாயம். ஏரின் ஆர் . அழகால் நிறைந்த, கரவு - வஞ்சகம். வண்கையிஞர் . கொடையாளர்.