பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 தொண்டைநாட்டுப் பாடல் பெற்ற சிவதலங்கள்

சண்முகப் பிள்ளையார்க்கு விளக்குப் போடப் பசுக்கள் தானம் செய்யப்பட்டன. பதினெட்டாம் நூற்ருண் டில் இங்கு வந்த டச்சுக்காரர்களைப் பற்றிய குறிப்பு களும் தெரியவருகின்றன. அவற்றில் ஒன்று கழுகுகள் வந்து உணவு அருந்திப் போவதை அவர் கள் கண்ட காட்சியாகும்.

இவர்கள் கண்ட காட்சியைப்பற்றி ஒரு செவி மரபு வரலாறு சொல்லப்படுகிறது. அதாவது ஒரு டச்சுக்காரர் பட்சிப் பண்டாரம் கழுகுகளுக்குச் சர்க்கரைப் பொங்கலைக் கொடுக்கக் காத்திருந்த போது, அந்த டச்சுக்காரர் அவருக்குப் பக்கத்தே மீன்களைப் பரப்பி வைத்தனராம். ஆணுல், கழுகுகள் மீனை உண்ணுமல் சர்க்கரைப் பொங்கலேயே உண்டு சென்றனவாம். இதுவே அவ்வரலாறு.

திருக்கழுக்குன்ற சிற்பங்கள் சில நரசிம்மவர்ம பல்லவன் காலத்தன. இங்குள்ள மூல இலிங்கம் மூலத்தான ஈஸ்வரர் என்பது. கி. பி. ஏழாம் நூற் ருண்டு கந்த விஷ்ணு என்னும் பல்லவன், இதற்கு மான்யம் விட்டுள்ளான். பக்தவச்சலர் கோவில் கி. பி. பதின்மூன்ரும் நூற்ருண்டு சடாவர்மகுல் نتی بسا سه ساله -سiسته

லிகர் ○ w திருக்கழுக்குன்றம் செங்கல்பட்டிலிருந்து தென் கிழக்கே ஒன்பது கல் தொலைவில் உளது. சென்னை யிலிருந்து அடிக்கடி பஸ் போக்கு வரவும் உண்டு.

திருக்கழுக்குன்றத்திலிருந்து பன்னிரண்டு கல் சென்ருல் திருப்போரூர் என்னும் முருகப்பெருமான் கோவிலையும், சிதம்பரசுவாமிகள், மெளன. சுவாமிகள் மடங்களையும், குன்றின்மீதுள்ள சிவன் கோவிலையும் வணங்கலாம். இங்கு ருலரு சிதம்பர சிவஞான சுவாமிகள் திருப்போரூர் ஆதீன பரம்பரைத் தரும கர்த்தராக விளங்குகின்றனர்.