பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. திருக்கழுக்குன்றம் 2.9}

திருக்கழுக்குன்றத்திற்கு ஒன்பது கல் தொலை வில் மகாபலிபுரம் என்னும் ஊர் உள்து. இங்கு மலையில் குடையப்பட்ட சிற்பங்கள் பற்பல வாகும். இவற்றைக் காண வெளியூர்களிலிருந்து பற் பலர் வந்தவண்ணமாக இருப்பர். மேற்கு நாட்டவர் இந்தியாவிற்கு வந்தால் இந்த இடத்தைக் கண்டே செல்வர். இங்குச் சிவன் கோவில் கடற் கரை அருகே உளது. ஊரில் திருமால் கோவில் உளது. இத் தலத் துப் பெருமாள் தலசயனத் துறைவார் என்றும், தேவியார் நிலமங்கை நாச்சியார் என்றும் கூறப்பெறு வர். தீர்த்தம் கருட நதி. தலசயனமூர்த்தி, புண்டரீக ரிஷிக்குக் காட்சிதந்தவர். பூதத்தாழ்வார் பிறந்த தலமும் இதுவே. பூதத்தாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் இத் தலத்தைப் பாடியுள்ளனர்.

மகாபலி புரத்தில் வராகப் பெருமாள் சந்நிதியும் உண்டு. கடற்கரை மணல் பரப்பில் அடிமட்டத்தில் ஒரு கோவில் அமைப்புக் காணப்படுகிறது. மகா பலிபுரம் யாத்திரிகர்கட்கு இடமாக இருத்தலின், அரசாங்கம் பல வசதிகளைச் செய்துள்ளது.

திருக்கழுக்குன்றத் தலத்தின்மீது சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் தனித் தனியே ஒவ் வொரு பதிகம் பாடியுள்ளனர். சம்பந்தர் பாடியபதிகம் கலிநிலைத்துறை யாப்பால் ஆனது. இதன் பண், குறிஞ்சி. இவ்விரண்டைப் பற்றிய குறிப்பு முன்பே எழுதப்பட்டது. அப்பர் பாடிய பதிகம் திருத்தாண் டகம். இதன் இலக்கணமும் முன்பே கூறப்பட்டது. சுந்தரர் பதிகம் கலிநிலைத்துறை யாப்பால் அமைந் தது. பண் நட்ட பாடை. இவற்றின் விளக்கங்களும் முன்பே விளக்கப்பட்டன. * " ...}...

மாணிக்கவாசகருக்கு இறைவர், இங்குக் குரு தரிசனம் காட்டியுள்ளார். அதனைப் போற்றித் திரு வாதவூர் அடிகள் பாடிய திருவாசகப் பதிகமும் ஒன்று உண்டு.