பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 தொண்டைநாட்டுப் பாடல் பெற்ற சிவதலங்கள்

அஃது எழுசீர்ஆசிரிய விருத்தம் ஆகும். திரு வாசகப் பாடல்களுக்குப் பண் வகுக்கப்படவில்லை. ஆணுல், பெரும்பாலும் மோகனராகத்தில்தான் ஒது வார்கள் இப்பாடல்களைப் பாடி வருகின்றனர்.

இத்தலத்திற்குத் தல புராணம் உண்டு. இத் தலத்தின் மீது அந்தகக் கவி வீரராகவ முதலியார் பாடியுள்ள உலா ஒன்றும் உளது. இவ்வுலாவில் வரும் கீழ் வரும் வரிகள் படித்தற்குச் சுவை தருவன வாகும். திருமணம் ஆனவர்கள் தனிக்குடித்தனம் செய்வது வழக்கம் ஆதலின், அவர்களைப்போலச் சிவபெருமானும் தம் திருமணத்திற்குப் பிறகு திருக் கழுக்குன்றத்தில் குடி புகுந்தார் என்பதை,

விருப்பின் மலேமகளே வேட்டொரு கால்வேதம் பொருப்பின் நெடிது குடிபுகுந்தான்" என்றும், நடனம் ஆடிய இளைப்பைப் போக்க இங்கு. வந்து தங்கினுர் என்பதை,

சாற்றும் வடவனத்தில் ஆடித் தனதிளேப்பை மாற்றும் கதலி வனத்திகுன்' என்றும் பாடி இருப்பதைப் படித்து இன்புறுக இப்படிப் பல இன்பந்தரும் குறிப்புகள் இவ்வுலாவில் உண்டு.

திருஞானசம்பந்தர் இத் தலத்தின் மீது பாடி யுள்ள திருக்கழுக்குன்றத் திருப்பதிகத்தின் மூலம் நாம் அறிவன : இறைவர் இத் தலத்தை விரும்பி வாழ்பவர் என்னும் குறிப்பு ஒவ்வொரு பாட்டின் ஈற்றிலும் தாதல்செய் கோயில் குழுக்குன்றே" என்று கூறி இருப்பது கொண்டு அறிகிருேம்.

பாலருவாயர் இறைவரைப் பற்றிக் கூறுகையில், "வானகத்தார் வையகத்தார்கள் தொழுதேத்தும் கானகத்தான்' என்றும், சிறுத்தொண்டர் உள்ளம்