பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. திருக்கழுக்குன்றம் - 299.

எல்லாம் உள்கிநின்று ஆங்கே உடன் ஆடும். கள்ளம் வல்லான்' என்றும் கூறியுள்ளனர்.

இப் பதிகத்தில் இத்தலத்துத் தேவியாரைப் பெண்ணின் நல்லாள்" என நாலாவது பாட்டில் குறித்திருப்பதைக் காண்க. இப் பதிகத்தில் ஏழாவது பாடல் கிடைத்திலது. - - ..::

கடைசிப் பாட்டு, இப் பதிகத்தைப் பாடவல்ல. வர்கள் புண்ணியராய் விண்ணவரோடு வாழ்வர் என்றும், திருஞானசம்பந்தர் சீர்மையுடையவர் என்றும், இப் பதிகம் பண்ணுடன் பாடப்பட்டது. என்றும் அறிவித்து நிற்கிறது. இந்த உண்மைகளே,

'கண்ணு தலான் காதல் செய் கோவில் கழுக்குன்றை நண்ணி பசீர் ஞானசம் பந்தன் தமிழ்மாலை பண் ணி யல்பால் பாடிய பத்தும் இவைவல்லாச் புண்ணி யராய் விண்ணவ ரோடும் புகுவாரே'

என்னும் பாடலில் காணலாம்.

தேன கத்தார் வண்டது வுண்ட திகழ்கொன்றை தான கத்தார் தண்ம தி சூடித் தலைமேலோர் வான கத்தார் வையகத் தார்கள் தொழுதேத்தும் கான கத்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே"

-முதல் திருமுறை. திருநாவுக்கரசர் இத் தலத்தின் மீது பாடிய இரு தாண்டகங்களுள் முதல் தாண்டகந்தான் இத் தலத்தின் மீது பாடப்பட்டது என்பதை நன்கு விளக்கிக் கொண்டிருக்கிறது. ஆனல் இரண்டா

உள் கி நினைத்து, மதி - சந்திரன். தேன் அகத்து . தேனின் உள். ஆல் - பொருந்திய நக - மலர. தண்மதி - குளிர்த்த சந்திரன். வையகத்தார் - உலகத்தார். -