பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0ே2 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

‘'நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால் ஆளும் நம்ம விக்னகள் அல்கி அழிந்திட' வெளிறு தீரத் தொழுமின் வெண்பொடி ஆடியை :புலைகள் தீரத் தொழுமின்' :பிழைகள் தீரத் தொழுமின்' சொல்லல் சொல்லித் தொழுவ ரைத்தொழுமீன்கள் : என்பன. -

ஈற்றுப் பாடலில், சுந்தரர் தம்மை வளம் பெருகிய தோள்களையுடைய ஆருரன் என்கின்ருர். (இதல்ை சுந்தரருடைய உடல் வளத்தையும் அழ கையும் அறிந்து கொள்ளலாம்.) இப்பதிகம் இயற்கை அழகும் பண் அழகும், பொருந்தப் பாடப்பட்டிருக்கி றது. ஆகவே, இப்பாடல்களைப் பாடுபவரை நோக்கி 'மக்களே பாடித் தொழுது நல்வழிபடுங்கள்' என்று சுந்தரர் கூறுகின்ருர், -

கொன்று செய்த கொடுமை யால் பல சொல்லவே நின்ற பாவ வினேகள் தாம் பல நீங்கவே - சென்று சென்று தொழுமீன் தேவர் பிரான் இடம் கன்றி குேடு பிடி சூழ் தண்கழுக் குன்றமே”

- ஏழாம் திருமுறை.

மாணிக்கவாசகர் இத் தலத்தின் மீது பாடிய பதிகத்தின் வழி நாம் அறிவன : இறைவர் குருவுடி வாக வந்து காட்சி தந்த உண்மையை இப் பதிகத் தின் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் காட்டினுய் கழுக்குன்றிலே என்று அமைத்துப் பாடி இருப்பது கொண்டு உணர்ந்து கொள்ளலாம்.

இறைவர் திருவாதவூரரைத் திருப்பெருந் துறையில் குரு வடிவில் வந்து ஆட்கொண்டமையின் நித்தலும் . தினமும், வெளிறு - அறியாமை, புலேகள். கீழ்மைக் குணங்கள். சொல்லல் சொல்லவேண்டிய சுந்தர ரின் பாடல்களே. சந்தம் - சந்தனம். நாறும் . மணக்கும்.