பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. திருவக்கரை

இத் தலம் வக்ராசுரன் என்பவனுல் பூசிக்கப் பட்ட காரணத்தால் இப்பெயர் பெற்றது. வக்கரனது எலும்பைப் பெறுவதற்குக் காளியும் பூசித்திருக்கின் ருள். அவளது ஆலயம் புகழுடன் இன்றும் அங் குளது. சந்திரன், குண்டலமாமுனி ஆகிய இவ் விருவரும் இங்குப் பூசித்துள்ளனர். -

இங்குள்ள மூலத்தான இலிங்கம் மூன்று முகம் ப்ெற்று விளங்குகிறது. ஒவ்வொரு யுகத்தின் முடிவி லும் ஒவ்வொரு முகமாகத் தோன்றி, நான்காவது யுகமாகிய கலியுகம் முடிந்ததும் நாலாவது முகத்து டன் இவ்விலங்கம் தோன்றும் என்று கூறுகின்றனர். இங்குள்ள நடராசப் பெருமான் வக்ரதாண்டவர். இத் தலத்திற்குத் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றே உளது. அது தரவு கொச்சகத்தால் ஆனது. இதன் இலக்கணம் முன்பே கூறப்பட்டது. இப்பதிகப் பண் பஞ்சமம். இதனை இக்காலத்து ஆகிரி இராகம் என ஒருவாறு கூறலாம். ·: *** . *** ... ·:• : * * ५५.: .”

இத்தலத்து இறைவர் சந்திரசேகரர். இதனைத் திருஞானசம்பந்தர் தம் பதிகத்தின் மூன்ரும் பாட லில் சந்திர சேகரனே அருளாய்” என்று குறித்துள் ளார். இறைவியார் திருப்பெயர் வடிவாம்பிகை, அமிர்தாம்பிகை என்று கூறப்பெறும். .

இத் தலத்தைக் கண்டராதித்தர் மனேவியார் செம்பொன் மாதேவியார், கருங் கல்லால் கட்டி னர் என்பர். அவ்வம்மையார் கட்டுதற்கு முன்பு இத்தலம் மரத்தாலும், செங்கற்களாலும் கட்டப்பட்ட தாகத் தெரிகிறது. இத் தலத்தின் பிராகாரத்தில் திருமால் கோயில் உளது.

இத்தலத்தை மைலம் ஸ்டேஷனில் இருந்து சென்று முருகன் தலமாகிய மைலத்தை அடைந்து