பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. திருக்கச்சி ஏகம்பம் 盛3

திருக்கச்சியை அடைந்தால் இன்பமாய

நெறியை (சன்மார்க்கம்) அடையலாம் என்பதை,

ஏரசர் பூங்கச்சி ஏகம்பனை எம்மானேச் சேராதா இன்பமாய் அந் நெறி சேரா ரே என்று அறிவித்துள்ளனர்.

இறைவன் சடையில் விளங்குவன நொச்சி, வன்னி, கொன்றை, மதி, கூவிளம் என்பன என்பதும் தெரிகிறது. மதி, சந்திரன். ஏனையவை மலர்கள்.

கச்சியம்பதி இசையும், நடனமும் நிறைந்த நகராய்த் திகழ்ந்தது என்பதை,

பாராரும் முழவம் மொந்தை குழலி யாழ்ஒலி சீரார் பாடல் ஆடல், சிதைவில்ல தோர் ஏராக் பூங்கச்சி என்று உணர்த்தியுள்ளனர்.

திருஞான சம்பந்தர், திருவேகம்பம் அடை வாரைத் தம் சிரமேல் கொள்வார் என்பதையும், திரு.ஏகம்பம் மேயானே மேவுவார் என் தலை மேலாரே " என்று போற்றிப் புகழ்கின்ருர்,

இப்பதிகத்தில் சீர்காழி, கம்தண் பூங்காழி' என்று புகழப்பட்டுள்ளது. சம்பந்தர் தம் பாடலே * கலிக்கோவை என்று அடிக்கடி கூறுவர். இங்கும் இதனேக் குறித்துள்ளனர். கலிக் கோவையாவது ஒலி மாலையாகும். மாலை ஈண்டுப் பாமாலை. இப் பதிகத்தின் பயன் பாடி ஆடப் பாவம் கெடும் என்பது.

மூன்ரும் திருமுறையில் கச்சியைப் பற்றிய இரு பதிகங்கள் உள்ளன. முதல் பதிகம் திருஇருக்குக் குறள் . இஃது ஒவ்வோர் அடியும் இருசீர்களேக்

முழ வம்-மத்தளம். மொந்தைகடம். குழல் - புல்லாங் குழல், யாழ். வீணே ஏர்-அழகு. சிதைவு அழிவு, கம்-நீர்,