பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

இரண்டாம் திருமுறைப் பதிகப் பண் இந்தளம், இதனை இக்காலத்து நாதநாமக்கிரியை என்னும் இராகத்தோடும், இலளித பஞ்சமி இராகத்தோடும் ஒருவாறு இணைக்கலாம். இப் பதிகத்தின் யாப்பைக் கலிவிருத்தப் பாவால் ஆனது என்னலாம். நான்கடி களைக் கொண்டு, ஒவ்வோர் அடியும் பெரிதும் ஈர் அசைச் சீர்களைக் கொண்டு வருவது கலி விருத்தம்.

இவ் இரண்டாம் திருமுறையில் காஞ்சியம்பதி,

ஏர்கொள்கச்சி, ஏரா பூங்கச்சி ' குன்றேய்க்கும் நெடுவெண்மாடக் கொடி கூடிப்பே ய், மின் தேய்க்கும் முகில்கள் தோயும் வியன்கச்சியுள் மன்று எய்க்கும் மல்குசீரால் மலி ஏகம்பம் ” கலிக் கச்சியுள் புடையே பொன் மலரும் கம்பைக்

(கரையேகம்பம் ” வழுவாமே மல்கு சீரால் வளர்ஏகம்பம்' - தீதில் கச்சித் திருவேகம்பம்’ * அந்தண் பூங்கச்சி ’’ என்றெல்லாம் புகழப்பட்டுள்ளது.

திருஞான சம்பந்தருக்குத் திரு ஏகம்பன் மீது மிகுந்த பற்றுள்ளது என்பது, "திருஏகம்பம் உறை வானே அல்லது உள்காது எனது உள்ளமே ' *ஏகம்பம் உடையானே அல்லது உள்காது' என்று. உணர்த்தி இருப்பதனுல் அறிய வருகின்றது.

ஏர்-அழகு. ஆர்-பொருந்திய, பூ-அழகிய ஏய்க்கும். போல இருக்கும். மின் - தேய்க்கும். முகில்.மேகம். வியன். பரந்த, மன்று சபைகள். மல்கு - பெருகும். மலி - மிகுந்த. கலி - ஒலி. புடையே - பக்கத்தே பொன் - பொன்நிறமான கொன்றை, கம்பை . கம்பாநதி, - வழுவாமே - தவருமல், எழில்-அழகு. தீது தீமை, அம்தண்-குளிர்ச்சியும், அழகும். உறை வான் - வாழ்பவன். உள்காது-நினைக்காது. நெறி - வழி. பார் - பூமி, பூ - அழகிய, ஆரும் . பொருந்திய,