பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தொண்டைநாட்டுப் பாடல் பெற்ற சிவதலங்கள்

இறைவர் எங்கும் நிறைந்தவர் எனினும், கழலடி போற்ருக் கயவர் நெஞ்சில் குய்யம் பெய். தாய்' என்று குறிப்பிட்டிருப்பது இங்கு அறிதற். குரியது. குய்யம் பெய்தாய்' என்பது மறைப்பாய், இருப்பாய் என்பதாம்.

சில காலங்களுக்கு முன்பு ஏகாம்பரர் எழுந்: தருளி யிருக்கும் காஞ்சிபுரம் பெரிய காஞ்சிபுரம் என்றும், வரதராசப் பெருமாள் எழுந்தருளி இருக்கும் காஞ்சிபுரம் சின்ன காஞ்சிபுரம் என்றும் எல்லோரா லும் கூறப்பட்டு வந்தது. ஏகாம்பரர் வீற்றிருக்கும் காஞ்சிபுரம் பெரிய காஞ்சிபுரம் என்றே வழங்கப் பட்டது என்பது அப்பர் வாக்காலும் நன்கு உணரலாம், இதனைத் திருநாவுக்கரசர் பெரும்காஞ்சி எம் பிஞ்ளுகனே (தலைக்கோலம் உடையவனே) என்று குறிப்பிடும் ஆற்ருல் தெளியலாம். ஆனல், இதுபோது இவ்விரு காஞ்சியும் முறையே. சிவகாஞ்சி என்றும், விஷ்னு காஞ்சி என்றும் கூறப்படுகின்றன.

இறைவன் ஆன்பர்க்கு எளியவன் என்பதையும், தேவர்கட்கு ஆரியவன் என்பதையும் ஐந்தாவது பாட்டில் குறிப்பிட்டுள்ளனர். இதனை,

உணர்வரியான், உள்குவார் வினையைக் கரைக்கும்எனக் கைதொழுவது அல்லால், அமிர்தற்கும் அறிய ஒண்ணுன் எங்கள் ஏகம்பனே' என்னும் வரிகளில் காண்க.

அப்பர் பெருமானுர் பிறர்க்கு இரங்கும் மனத்.

தினர் என்பது கீழ்வரும் இரண்டு பாடல்களால் நன்கு புலனுகின்றன.

1. உள்குவார் . நினைப்பவர். அமிர்தர் - தேவா.முதம் உண்ட தேவர்கள். ஒண்ணுன் - முடியாதவன்.