பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 , திருக்கச்சி ஏகம்பம் 33

அரி அயன் இந்திரன் சந்திர தித்தர் அமரர்எல்லாம் உரியநின் கொற்றக் கடைத்தலே யார் உணங் காக்கிடந்தார் புரிதரு புன்சடைப் போக முனிவர் புலம்புகின் ருர் எரீதரு செஞ்சடை ஏகம்ப என்னே திருக்குறிப்பே. பாம்பரைச் சேர்த்திப் படரும் சடைமுடிப் பால்வண்ணனே கூம்பலேச் செய்த கரதலத் தன்பர்கள் கூடிப்பல் நாள் சாம்பலப் பூசித் தரையில் புரண்டுநின் தாள் சரண் என் றேம் பலிப் பார்கட் கிரங்குகண் டாய்கச்சி ஏகம்பனே.

  • இப்பாடல்களில் தேவர்கள் முதலானுேர் இறை வன் திருக்கோயில் முன்பு வாடிப் புலம்பி நிற்றலை யும், அன்பர்கள் ஏகம்பனே சரண் என்று புரண்டு கொண்டிருத்தலையும் அப்பர் குறிக்கின்றனர்.

அப்பர் தம்மை இறைவர் ஆட்கொண்டு ஏற்றுக் கொண்டதை உறுதிப்படுத்தி அதற்கு உலகமே சான்று என்பதையும் மொழிந்துள்ளனர். இதனை, 'ஏன்றுகொண் டாய்என்னே எம்பெரு மான் இனி அல்லம் சான்றுகண் டாய் இவ் உலகம் எல்லாம்' (எனில்

என்னும் வரிகளில் காணலாம்.

அப்பர் இந்தப் பதிகத்தில் ஏகாம்பரரது காட்சிச் சிறப்பைக் குறிக்க வந்தபோது, அங்குக் கூடி இருந்தவர்களைக் குறிப்பிட்டுத் தாம் இந்த நெருக் கத்தில் எங்ங்ணம் வணங்குவது என்பதை வெகு நயமுறப் பாடி அறிவித்துள்ளனர். இதனை,

அரி - விஷ்ணு. அயன் - பிரமன் ஆதித்தர் - சூரியர், அமரர் - தேவர். கொற்றம் - வெற்றி, வீ ம், உனங்கா - வாடி, புரிதரு சுருண்ட புன்சடை - சிறு சடை எரீ . தீ, போகம்-சிவானந்த இன் பம், அரை-இடுப்பு. கூம் பல்-குவித் தல். கரதலம் - கை. ஏம்பல் - ஏங்குதல். சாம்பல் - திருநீறு. சான்று - சாட்சி.

تاییده