பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

சிவபெருமானே தேவர்கள் உள்பட எல்லா உயிர்களையும் படைப்பவன். பிறர் படைக்கின்றனர் என்பது உபசாரமே அன்றி, உண்மை அன்று. பிரம னேப் படைத்தவன் திருமால் என்பது உலக வழக்கு. உண்மையில் பிரமனேப் படைத்தவன் சிவபெரு, மானே ஆவான். இந்த உண்மையினே அப்பர் பெரு, மானுர், மறையவனைப் பயந்தோன் காண்' என்று: உணர்த்தியுள்ளதைக் காண்க. திருமழிசை ஆழ்வார்,

" நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்

தான்முகமாய்ச் சங்கரனேத் தான்படைத்தான் ” என்று பாடி இருத்தல் ஆழ்வார் திருமால்மீது கொண்ட பெரும் பற்றில்ை என்க. சிவபெருமான் பிரமனப் படைத்தான் என்று கண்டபோது, அப் பிரமன் சங்கரனைப் படைத்தான் என்பதை ஏற்க முடியுமோ?

இரண்டாவது தாண்டகப் பதிகத்தில், திரு வானைக்கா இறைவர், சிலந்திக்கு அருள் செய்து அதனைச் சோழ மன்னகைச் செய்த குறிப்பை,

“பண்டுபல சருகால் பந்தர் பயின் தநூல் சிலந்திக்குப் பாராள் செல்வம் ஈந்தவன் காண் ’’’

என்று பாடிக் காட்டியுள்ளனர்.

இராவணனைக் காலால் இறைவர் அழுத்தின. ரேனும், அவனது பாடல் கேட்டு இரக்கம் காட்டி, வாள் ஈந்ததை அவன் தன் வாயில் இன்னிசை கேட்டு இலங்கு ஒளிவாள் ஈந்தோன் கச்சி ஏகம்பன்' என்று பாடியுள்ளனர்.

அறுத்தான் காண் அயன்சிரத்தை அமர வேண்ட

ஆழ்கடலின் நஞ்சுண்டாங் கணிநீர்க் கங்கை செறுத்தான்காண் தேவர் க்கும் தேவன் தான் கான்

திசைஅனைத்தும் தொழுதேத்தக் கலைமான் கையில்