பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

திருமேல்தளி நாதர் கோயிலுக்கும், திருமால் சிவ சாரூபம் பெற்ற உருவமான ஓத உருகீசுவரர் கோவி, லுக்கும் கிழக்குத் திருவீதியில் திருஞான சம்பந்தர் கோவில் உளது. திருஞான சம்பந்தர் பாடிய பாட இலக் கேட்ட முத்தீசர் சந்நிதியும் உண்டு. ஆல்ை சம்பந்தர் பாடிய பதிகம் கிடைத்திலது. திருஞான சம்பந்தருக்குப் பிள்ளையார் என்னும் பெயரும் உண்டு. இப் பிள்ளையார் இங்கு எழுந்தருளியதால் இவ்விடம் பிள்ளையார் பாளையம், பிள்ளைப் பாளையம் என்று வழங்கப்படுவதாயிற்று. இங்குச் செங்குந்த முதலிமார் மரபினர் மிகுதியாக உள்ளனர். காஞ்சிக் குச் சென்ருல் காலாட்டிக் கொண்டு சாப்பிடலாம் என்பதை நேரில் கண்டு உண்மையினே உணரலாம். தறியை ஒட்டும் போது காலால் அசைத்து ஒட்டுத லின் அதுவே ஈண்டுக் காலாட்டுதல் என்று கூறப் பட்டது. இத்தலத்து இறைவர் திருமேல்தளி நாதர், தேவியார் காமாட்சி அம்மையார் (திருமேற். றளிநாயகி என்றும் கூறுவர்) தீர்த்தம் விஷ்ணு. தீர்த்தம். இத்தலத்திற்கு அப்பர் பெருமான் பாடி யுள்ள திருநேரிசைப் பதிகம் ஒன்றும், சுந்தரர் பாடி யிள்ள பதிகம் ஒன்றும் ஆக இரண்டே பதிகங்கள் உள்ளன.

இத்தலத்துக் கல்வெட்டுகளின் மூலம் இறை. வர் திருப்பெயர் திருமேல்தளி உடைய நாயனுர் என்பதும், திருக்கோயில் திருமேல்தளித் திருக் கோயில் என்பதும் அறிய வருகின்றன. மேலும், கல்வெட்டுகளால் அறிய வருவன, ஒவ்வொரு தறிக்கும் ஐந்தரைப் பணம் செங்குந்தரிடமிருந்து பெற்றுத் திருக்கோயில் தினசரி வழிபாட்டிற்கும். விளக்கிற்கும் பயன் படுத்தப்பட்டது என்பதும், கோயிலேச் சார்ந்து ஒரு மடம் இருந்தது என்பதும், திருவேகம்பன் என்னும் பெயரில் ஒரு தெரு இருந்தது என்பதும் ஏகாம்பரநாதர் கோயில் பழுது