பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. திருக்கச்சி மேற்றளி 49

பார்த்தற்கு இரண்டு ஊர்களின் வரிப் பணம் ஒதுக் கப்பட்டது என்பதும், சந்திரகிரியில் அப்பராச உடையார் என்னும் கவிஞர் இருந்தார் என்பதும் ஆகும். இத்தலம் முன்பு சமண ஆலயமாக இருந்து, பின்பு சைவ ஆலயமாக மாறியது என்று கூறும் செவிமரபு செய்தியும் உண்டு.

அப்பர் பாடியுள்ள இத்தலத்துத் திருப்பதிகத் தின் வழி நாம் அறிவன பின் வருவன : இத்தலத் துத் திருப்பதிகம் திருநேரிசை. இதன் இலக்கணமும் பண்ணும் முன்பு குறிக்கப்பட்டுள்ளன. ஆண்டுக் காண்க,

இப்பதிகத்தில் கச்சிமேல்தளி பாடல் ஆடல் இலங்குமேல்தளி’ என்று சிறப்பிக்கப்பட்டுள்ளது. முருகனைப் பற்றிய குறிப்பு இரண்டாவது பாட்டில் *நல் கடம்பன்' (நல்ல கடம்ப மலர்மாலே அணிந்த முருகன்) என்ற தொடராலும் விளங்குகிறது. எட் டாவது பாட்டில் வரும் சேந்தன மகளுக் கொண்டார்” என்னும் வரியாலும் அறியவருகிறது. முருகனை நல் கடம்பன்' என்று அப்பர் பாராட்டும் முறையைக் காண்க. ஈண்டுச் சேந்தன் ஆவான் செந்நிறத்தனை முருகன். இறைவர்க்குத் திருமா லிடத்தில் மகிழ்ச்சி உண்டு என்பதை மாயன் தன்னை மகிழ்ந்தனர்' என்னும் வரியால் தெரிந்து கொள்ளலாம். சிவபெருமானுர் மதுரையில் கெளரி யின் பொருட்டு விருத்த குமார பாலர் ஆயினுர், கிழவனுகவும், பின் வாலிபனுவும், அதன்பின் குழந் தையாகவும் கெளரிக்குக் காட்சி தந்தனர். இந்தக் குறிப்பு விருத்த ராகும் பாலனுர் ' என்னும் வரி உணர்த்தி நிற்கிறது. இறைவன் உயிர் இனங் கட்குத் தலைவர் என்பது பசுபதி என்னும் பெயர் தோற்றுவிக்கிறது. ஈண்டுப்பசு என்பது உயிர்களையே குறிக்கும்.

4.