பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

சிவபெருமான் இருக்கும் இடத்தை அப்பர் ' பண்ணிடைப் பாடி ஆடும் பத்தர்கள் சித்தம் கொண்டார் :: என்னும் அடியில் குறிப்பிடுகிருர், இறைவர் எண் ணுகவும், எழுத்தாகவும் உள் ளார் என்பதை எண்ணிடை யெழுத்தும் ஆளுர் ' என்னும் தொடர் அறிவிக்கிறது, இறைவர் திருமாலைத் தம் பாகத்தில் கொண்டுள்ளார் என்னும் குறிப்பு, ' மண்ணினே உண்ட மாயன் தன்னையோர் பாகங் கொண்டார் ' என்னும் தொடரில் காணப்படுகிறது.

செல்வியைப் பாகம் கொண்டார் சேந்தனை மகளுக்

- கொண்டார் மல்லிகைக் கண்ணியோடு மாமலர்க் கொன்றை சூடிக் கல்வியைக் கரைஇ லாத காஞ்சிமா நகர்தன் உள்ளால் எல்லியை விளங்க நின் ருர் இலங்குமேல் தளிய ளுரே'

காஞ்சி இயற்கை அழகுடையது என்பதை, *அணிபொழில் கச்சி" (அழகிய சோலைகள் நிறைந்த காஞ்சி என்பதாலும், கல்விச் செல்வம் நிறைந்தது என்பதை, "கல்வியைக் கரையிலாத காஞ்சி மா நகர்: என்பதாலும் தெரிந்து கொள்ளலாம்.

இத் தலத்துச் சுந்தரர் பதிகத்தைக் கலிநிலைத் துறை என்னலாம். அதாவது, இஃது ஒவ்வோர் அடி யும் ஐந்து ஐந்து சீர்களேப் பெற்று வருவது. இந்த் ஐந்து சீர்கள் கட்டளேக் கலித்துறை போல வெண் டளே பெற்றிரா. இப்பதிகப் பண் நட்ட ராகம். இதனைப் பந்துவராளி இசை போன்றது என்னலாம்.

சுந்தரர் இத்தலத்துப் பதிகத்தில் இறைவரை நோக்கி உன்னை அல்லால் இனி ஏத்த மாட் டேனே' என்று உறுதியுடன் கூறுகின்ருர். இதனை

செல்வி உமாதேவி. கண்ணி . மாலை. எல்லியை . சூரியனே. இலங்கு - விளங்கு.