பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. திருக்கச்சி மேற்றளி 5 *

ஒவ்வொரு பாட்டின் ஈற்றிலும் அமைத்துப் பாடு கின்ருர். இத்துடன் இன்றி 'உனயே நினைந்திருந் தேன்' என்றும் பாடுகின்ருர். இறைவர் தம் உளம் புகுந்து போகா நிலையினையும் வந்தாய் போய் அறியாய் மனமே புகுந்து நின்ற சிந்தாய் ' என்று பாடிக் காட்டி யுள்ளார். .

இவர் இறைவரைக் கேட்பது பிறவாமையே என்பதை, -

ஆட்டான் பட்டமையால் அடி யார்க்குத் தொண்டுபட்டுக் கேட்டேன் கேட்பதெல்லாம் பிற வாமை கேட்டொழிந்தேன்’ என்னும் வரியால் உணரலாம். .

சிவபெருமான் சுந்தரர்பால் பெரிதும் அன்புடை யார் என்பது, அவர் நினையாத போதும் அவர் சுந்தரர் உள்ளத்தில் புகுந்ததனுல் புலனுகிறது. இதனைச் சுந்தரர்,

மோருந் தோ ஒருகால் நினே யாதி ருந்தாலும் வேரு வந்தென் உள்ளம் புக வல்ல மெய்ப்பொருளே’ என்று பாடியுள்ளனர். சுந்தரர் துன்பம் இன்றி இன்பமாக வாழ்ந்ததை, -

உற்ருர் சுற்றம்எனும் அது விட்டு துன் அடைந்தேன் எற்ருல் என்குறைவென் இட ரைத்து றந்தொழிந்தேன்’ என்று பாடி உணர்த்தி யுள்ளனர்.

சுந்தரர் தம் பெற்ருேரை இழந்து நின்ற நிலையில் இப்பதிகத்தைப் பாடியுள்ளனர் என்பது, - எேம்மான் எம்மனோன் நவர் இட்டி றந்தொழிந்தார் மெய்ம்மால் ஆயின தீர்த் தருள் செய்யும் மெய்ப்பொருளே’

என்று பாடுதலால் தெரிகிறிது.

மோருந்து தனித்து. ஆள் + தான் = ஆட்டான். எம்மான் . தந்தை. அனே - தாய், எற்ருல் - எதினுல்.