பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. திருவோண காந்தன்தளி § 7

வாரி ரும்குழல் வாள் நெ டுங்கண்

மலேம கள் மது விம்மு கொன்றைத்

தாரி ரும்தட மார்பும் நீங்காத்

தைய ல ள் உல குய்ய வைத்த

காரி ரும்பொழில் கச்சி மூதூர்க்

காமக் கோட்டம் உண்டாக நீர் போய்

ஊரி டும்பிச்சை கொள்வ தென்ளுே

ஒண காந்தன் தளிஉ வீரே .

என்று பாடி விணுவினர்.

முன்பு இரண்டாம் பாட்டில், இன்னின்ன கார .ணங்களால் உமக்கு ஆள் செய்ய முடியாது என்று பாடிய இவர், ஒரு பாட்டில் உம்மிடம் அன்புடைய வர்கள் உம்மால் என்ன பெற முடியும்? உம்மிடம் பெறத்தக்க பொருள்கள் உம்மிடம் இல்லையே என்று இகழ்வது போலப் புகழ்வாராய்,

வாரம் ஆகித் திருவ டிக்குப்

பணிசெய் தொண்டர் பெறுவ தென்னே ஆரம் பாம்பு வாழ்வ தாருச்

ஒற்றி ஊரேல் உம்ம தன்று தாரம் ஆகக் கங்கை யாளேச்

சடையில் வைத்த அடிகேள் உந்தம் ஊரும் காடு உடையும் தோலே

ஒண காந்தன் தளிஉ ரீரே",

என்று நகைச்சுவை தோன்றப் பாடியுள்ளனர்.

வாரிரும் குழல் - நீண்ட கரிய கூந்தல், வாள் - ஒளி, மதுவிம்மு - இன்பம் பொங்கும், தார் இரும் - மாலை அணிந்த பெரிய, தடம் - அகன்ற, காரிரும் பொழில் - கரிய பெரிய சோலே, காமக்கோட்டம் - காமாட்சியம்மன் கோயில். வாரம் அன்பு. இங்கு ஆருர் என்பது, திருவாகுக் என்ற பொருளேயும், ஆருடைய ஊர்? உம்முடைய ஊர் அன்று என் :னும் பொருளேயும் கொண்டுளது. ஒற்றியூர் என்பது திருஒற்றி ஊர் என்னும் பொருளேயும், உரிமை அடமானம் வைக்கப் பட்ட ஊர் என்னும் பொருளையும் ஈண்டுப் பெற்றுளது.