பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்



இப்பாடலில் ஒற்றியூர் என்பது திருஒற்றியூர் என்றும், உரிமை அடமானமாக வைக்கப்பட்ட ஊர் என்றும் இரண்டு பொருள்தரும் நிலையில் நகைச் சுவை அமைய, பாடி இருப்பதைக் கீழ்வரும் பாடலிலும் காண்க.

பெற்ற போழ்தும் பெறாத போழ்தும்
பேணி உம் கழல் ஏத்து வார்கள்
மற்றோர் பற்றிலர் என்றி ரங்கி
மதிஉ டையவர் செய்கை செய்யீர்
அற்ற போழ்தும் அலந்த போழ்தும்
ஆவத் காலத் தடிகேள் உம்மை
ஒற்றி வைத்திங் குண்ண லாமோ
ஒண காந்தன் தளிஉ ளீரே”.

இதிலும் நகைச்சுவை இருப்பதை ஊன்றி நோக்குக.

இப் பதிகத்தில் இறைவா! நான் ஊக்கக் குறைவு உடையவன். காமம், குரோதம், லோபம், மதம் உடையவன். ஆகவே, உம்மை நெறுங்க. அஞ்சுகின்றேன். ஆனல், உம் திருவடிகளை நினைந்து உய்வேன்' என்னும் குறிப்பினையும்,

வலையம் வைத்த கூற்றம் மீவான்
வந்து நின்ற வார்த்தை கேட்டுச்
சிலைஅ மைத்த சிந்தை யாலே
திருவ டிதொழு துய்யின் அல்லால்


பேணி போற்றி ஏத்துவார் . வாழ்த்திப் போற்றுவார். கழல்-திருவடி, அற்றபோழ்தும் ஒன்றும் இல்லாத போதும், அலந்தபோழ்தும் வழிகாணாது திரிந்தபோதும். ஆவத் காலம் - ஆபத்துக் காலம், வலயம் - வலை (பாசக்கயிறு), கூற்றம்-இயமன் மீவான்-வானத்தின் மீது. சிலை அமைத்த-கல்போல அமைத்த, உய்யின் - பிழைப்பின்.