பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. திருக்குரங்கணில் முட்டம் 貂忍

சம்மந்தர் இறைவரைப்பற்றிக் குறிப்பிடும்போது, பிரமனும் திருமாலும் அறியாது திகைக்கப் பின் போற்ற ஆர் அழல் குறியாய் நின்றவன்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

இத்தலத்தைக் கண்டு வணங்கியவர் பெறும் பேற்றையும் இப்பதிகம் வற்புறுத்துகிறது. யார் தொழுகின்றனரோ அவர்கள் துன்புருர் என்பதைக் ' குரங்கணில் முட்டம் தொழும் நீர்மையர் தீதுறு துன்பம் இலரே” என்னும் அடி புலப்படுத்துகின்றது. இத் துடன் இன்றி யார் கையால் தொழுகின்ருர்களோ, அவர்கள் தீவினைகளைக் கண்டறியார் என்பதை, "குரங்கணில் மூட்டம் கையால் தொழுவார் வினேகாண்டல் அரிதே' என்னும் அடி உணர்த்திக் கொண்டிருக் கின்றது. மேலும், ' குரங்கனில் முட்டம் நெதியால் தொழுவார் வினே நீந்ககிலாவே' என்று கூறி முறைப்படி வணங்குவார் தீவினைகள் பறந்தோடும் என்றும் கூறுகிறது. அரிய உபதேசமும் இப்பதிகத்தில் உண்டு, அதாவது, சமண பெளத்தர்களின் மொழி களைக் கொள்ளாதீர். சந்திர சேகரன் திருவடிகளைச் சேர்வதுதான் முறைமை” என்பது, - கழுவார் துவர்ஆ டைகலந்துமெய்போர்க்கும் வழுவாச் சமண் சாக் கியரீவசக் கவைகொள்ளேல் என்று கூறுமாற்ருல் உணர்க. - . .

ஆளுடைப்பிள்ளையார்தாம் பிறந்த சீர்காழியின் மதில் சிறப்பைக் கல்லார் மதில்' என்று கூறிக் களிக்கிருர். இப்பதிகத்தை யார் செவிக்கு இனி தாகப் பாட வல்லார்களோ, அவர்கட்கு இனி ஒரு தாயின் வயிற்றில் பிறக்காத நிலையில் மோட்ச

துவக் ஆடை - காவி உ.ை மெய் . உடல். வழுவா - தம் சமயநெறியில் தவரு.த. சாக்கியச் - பெளத்தர். அ | ண் - சமணர்,