பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

இன்பம் கிடைக்கும் என்கிருர், 'சொல்லார் தமிழ் மாலை செவிக்கினிதாக வல்லார்க் கெளிதாம் பிறவி வகை வீடே ' என்ற அடியினைக் காண்க.

விழுநீர் மழுவாள் படைஅண் ணல்விளங்கும் கழுநீர் குவளைம் மலரக் கயல்பாயும் கொழுநீர் வயல்சூழ்ந் தகுரங் கணில்முட்டம் தொழுநீர் மையர் தீ துறுதுன் பம்இலரே ’’.

-முதல் திருமுற்ை.

Łozoonooxotos

7. திருமாகறல்

இத்தலம் குரங்கணில் முட்டத்திலிருந்து தென் கிழக்கே மண்சாலைவில் ஆறு கல் தொலைவில் அமைந்துள்ளது. அங்கு ஒடும் சேயாற்றின் வடகரை யில் அமைந்துள்ளது என்னலாம். காஞ்சிலிருந்து தெற்கில் பதினைந்து கல்லில் உளது என்றும் கூற லாம். இங்குப்போகப் பஸ் வசதி உண்டு. கோயில் அழகானது. தூய்மையாகவும் இருக்கிறது. தேவேந் திரனல் பூசிக்கப் பெற்றது. இவன் பொருட்டு இறைவர் நண்டு வளையிலிருந்து தோன்றிக் காட்சி அளித்தனர். இத்தலத்தைச் சோமவாரத்தில் கண்டு வணங்கினல் மிக்க பயன் ஏற்படும். பிள்ளைப் பேற்றைப் பெற விரும்புவோர், கோவிலைக் காலால் சுற்ருது தம் அங்கத்தால் உருண்டு உருண்டு வலம் வந்து விரும்பியதைப் பெற்று இன்புறுவர். இங்குள்ள தீர்த்தங்கள் அக்கினி தீர்த்தம், நவ்வி தீர்த்தம்,

அடைக்கல தீர்த்தம் என்பன.

விழு - பெருமை, விழுப்பம் என்பது ஈண்டு விழு என நின்றது. நீர் மையர் . தன்மையர். படை - ஆயுதம். கழுநீர் - ஆம்பல் மலர், உறு - வந்து சேரும்.