பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தொண்டைநாட்டுப் பாடல் பெற்ற சிவதலங்கள்

கொண்ட ஆசிரிய விருத்த யாப்பினுல் அமைந்தது. இதில் சந்த அமைப்புப் பொருந்தி உளது என்பதைப் பாடும்போதே அறிந்து கொள்ளலாம். ஆகவே இது திரு இராகம் எனும் பெயரைப் பெற்றது. இப் பதிகப் பண் சாதாரி. இதனை இக்காலத்துப் பந்துவ ராளி இசை என ஒருவாறு கூறலாம்.

இத் தலத்து இறைவருடைய திருவடிகளை அடையவர்கள் பெரும் பயனே,

அண்ணல் அடிசேர்பவர்கள் தீவினைகள் தீரும் உடனே : 1. பெருமான் அடியை ஏத்த வினை அகலும் மிகவே ”

நீறு புனேவன் அடியை ஏத்த வினே மறையும் உடனே ' : நாதன் அடியாரை நலியா வினைகளே " w :: உன்னும் அவர் தொல் வினேகள் ஒல்க

உயர் வானுலகம் ஏறல் எளிதே ’’ ஐயன் அடி சேர்பவரை அஞ்சி அடையா வினேகள் அகலும் மிக லே' : ஈசன் என ஏத்திவினை நிற்றல்இல் போகும் உடனே "

பெருமான் ஆயபுகழ் ஏத்தும் அடி யார்கள் விணே ஆயினவும் அகல்வ எளிதே ’’ இடை ஊர்தியுடை அடிகள் அடியாரை அடையா வினேகளே ' என்றெல்லாம் சம்பந்தர் பாடி அறிவித்துள்ளனர்.

தோணிபுரத் தோன்றலார் இத் தலத்தின் இயற்கை அழகையும் ஊரின் சிறப்பையும் இனிதின் உணர்த்தும் முறையில்,

ஏத்த - போற்ற, வினே - பாவம், நீறு - விபூதி, புனவான் - பூசியுள்ள சிவபெருமான், பறையும் . நீங்கும், நலியா - துன்புறுத்தா உன்னும் - நினைக்கும், ஒல்க - ஒழிய, விடை : இரடபம், ஊர்தி . வாகனம்.