பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

9. திருவன்பார்த்தான் பனங்காட்டுர்

இத்தலம் வன்பாக்கம் என்னும் கிராமத்தை அடுத்து உள்ளது. பன மரத்தைத் தல விருட்ச மாகக் கொண்டது. இக் காரணம் கொண்டே இது திருவன்பார்த்தான் பனங்காட்டுர் என்னும் பெயரைப் பெற்றுளது. இக்காலத்தில் இது திருப்பனங்காடு என்று கூறப்படுகிறது. இத்தலத்தை அகத்தியர், புலத்தியர் ஆகிய இருவரும் பூசித்துப் பேறு பெற் றுள்ளனர்.

முனிவர்கள் இருவர் பூசித்த தலமாதலின் இரண்டு கோயில்கள் இங்கு உண்டு. ஒன்று தாளபுரீஸ்வரர் திருக்கோயில். இக்கோவில் பெருமானையே அகத்தியர் வழிபட்டனர். தாள புரீஸ்வரர் பனங்காட்டு நாதர் என்றும் கூறப் பெறுவர். (தாளம் பனே) இக்கோவிலின் தேவியிர் பெயர் அமிர்தவல்லி அம்மாள் என்பது. துரல கோமளபதாம்பாள் என்றும் கூறப் பெறுவர். இத் தலமே பாடல்பெற்ற தலம். இத் தலவிருட்சமே பன. தீர்த்தங்கள் ஓடாக்கங்கை, ஜடாக்கங்கை என்பன. இவைகளே அன்றி அப்பர் தீர்த்தம், சம்பந்தர் தீர்த்தம், சுந்தரர் தீர்த்தம் என்னும் பெயரில் மூன்று தீர்த்தங்களும் உண்டு.

இத்தலத்துக்கு வடக்கே உள்ள கோவில் இறைவராம் கிருபாநாதேசுவரர், புலத்தியரால் பூசிக்கப் பட்டவர். இங்குள்ள தேவியார் கிருபா நாயகி எனப் படுவார்.

இத்தலத்து இறைவரைச் சிபிச் சக்கரவர்த்தி பூசித்துள்ளனன். இங்குள்ள இறைவர்க்குச் சித்திரை மாதம் சூரிய பூசை நடைபெறுகிறது. அதாவது சூரியனது ஒளி இறைவர்மீது நேரே ப்டியும்.