பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. திருவன்பார்த்தான் பனங்காட்டூர் 3

இங்குள்ள இறைவர்க்குப் பனம்பழம் நிவேதம் செய் யப்படுவது ஒரு தனிச் சிறப்பு. கோயில் பழமை

LFక ట్రై! . .

வன்பாக்கம் கிராமத்தில் மற்றும் ஒரு சிவாலயம் உண்டு. அங்கு எழுந்தருளியுள்ள இறைவர் ராமசாமி ஈசுவரர் என்றும், இறைவியார் பஞ்சின் மெல்லடி அம்மையார் என்றும் கூறப் பெறுவர். -

இத்தலத்தைக் காஞ்சிபுரத்திலிருக்து தெற்கே நான்கு கல் சென்று, ஐயன் குளத்தை அடைந்து, மேற்கே திரும்பி, ஆர்க்காடு வழியே நான்கு கல் நடந்து, வடக்கே திரும்பி முக்கால் மைல் தூரம் சென்ருல் இக் கோவிலே அடையலாம். இடையே பாலாறு, வேகவதி ஆகிய இரு ஆறுகளைக் கடக்க வேண்டும். இதுபோது இங்குச் செல்ல நேர் பஸ் வசதி உண்டு.

இத்தலத்துக் கல் வெட்டில் இறைவர் பெயர், திருப்பனங்காடு உடையார், ஆளுடையார், திருப் பனங்காடு உடைய நாயனுர், அன்புடைய நாயனுர் என்று குறிக்கப் பட்டுள்ளது.

மண்டபத்தின் தென் சுவரில் உள்ள கல் வெட்டு, இக்கோயிலில் தட்சணுமூர்த்தி, மகா விஷ்ணு, பிரமன், துர்கை இவர்களின் திருவுருவங் களே எழுந்தருளச் செய்த விளக்கங்களை அறிவிக் கிறது. -

கி. பி. 1891ல் இங்குப் பஞ்சம் வந்த குறிப்பும் கல் வெட்டால் அறிய வருகிறது. குளம் உடைப் பெடுத்து நிலங்கள் தரிசாய்ப் போயின், அதன் பொருட்டுக் கோயிலார், கோயில் நிலங்களை விற்று அவ்வுடைப்பை அடைத்துள்ளனர். திருக்கண்ணப்ப நாயனுர் பரம்பரை வேடுவர்கள் இக்கோயிலுக்கு நிவந்தங்கள் அளித்த குறிப்பும் காணப்படுகிறது.