பக்கம்:தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

24



பொறுப்பை இதயம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதிக வேகமாகத் தன்னை அழுத்தி, இரத்தத்தை இறைக்கும் இதயத்திற்கும். அதனால் ஏற்பட வேண்டிய விரைவுக்கும் உதவக்கூடிய உயிர்க்காற்று - பிராண வாயு அதிகம் வேண்டுமே!

அத்தகைய உயிர்க்காற்று இல்லாவிடில், கரியமில வாயு, லேக்டிக் ஆசிட் போன்ற கழிவுப் பொருட்கள் எல்லாம் உடல் இயக்கத்தால் உடலுக்குள் அதிகம் சேர்ந்து விடுமே!

கழிவுப் பொருட்களால் தான் உடல் சோவடைகிறது. அந்த ஆயாசத்தையும் களைப்பையும் போக்கத்தான் உள் மூச்சும் வெளிமூச்சும் இணைந்து பெருமூச்சாகப் பெருகி வருகின்றது.

மெலிந்த வயிற் றுத் தசைகளை மேலும் மெலிந்ததாக்கி, சீரணிக்கும் உறுப்புக் களை செயல்படவிடாமல் பாதித்து, இரத்தக் கொதிப்பை இஷ்டம் போல் உண்டுபண்ணி, மலச்சிக்கலை மனமார ஏற்படுத்தி ‘மசமச’ வென்றிருக்கும் ஒரு மந்த நிலையில் வாழச் செய்கிறது. செயல்களில் சுறுசுறுப் பில்லாமல் மதமதத்துப் போகச் செய்வதுடன் அனாவசியமான கொழுப்பை அடிவயிற்றில் சுமந்து கொண்டு திரிபவரைப் பார்த்து அந்த இதயம் ஏன் பெருமூச்சு விடாது?

இந்தத் தொந்தியானது எந்த விதத்திலும், எந்தப் பருவத்திலும் யாருக்கும் எப்பொழுதும் ஏற்றதே அல்ல என்பது, எல்லோருடைய ஏகோபித்த அபிப்ராயமாகும். முடிவும் ஆகும். உண்மைதானே!