பக்கம்:தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

26



கால்களின் இடைவெளி அதிகமாகி விரிந்து கொள்ளும் பொழுது, நடக்கும் பொழுது கால்களின் மூட்டுக்களுக்குத் தான் எத்தனை வேதனை?

பலகை போன்ற அமைப்புள்ள வயிறு பானை போன்று, ஆகி, உடை, நடை, உணர்வு போன்றவற்றில் உட்புகுந்து கலக்கிவிட்டு, கலக்கம் ஏற்படுத்துகின்றது போதாது என்று, உடலுறவு நேரங்களிலும் நந்தியாகி வழிமறிக்கும் நிலையை நாம் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. அனுபவித்தவர்கள் அந்த அவதியை நிச்சயம் உணர்வார்கள்.

அதை அகற்றத்தான் இத்தனை அக்கறையை இப்பொழுது ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். நிலையை மேம்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

தொந்தியும் திருப்தியும்

ஆரம்ப காலத்தில் முந்திவரும் தொந்தியினை பணத்தொந்தி என்றும், படாடோபத்தின் சின்னம் என்றும் பெருமை பெற்றது மாறிப்போய், அதனை எவ்வாறேனும் அகற்றிவிடவேண்டும் என்ற ஆத்திர உணர்வுடன் அணுகிப் பார்க்கின்றனர் பலர். ஆண்டுக் கணக்காக அருமை பெருமையுடன் வளர்த்த தொந்தியை, ஐந்தாறு நாட்களுக்குள்ளேயே மரத்தின் ஆணிவேரறுப்பதுபோல தோண்டி எறிந்து விட முடியுமா? துடித்தால் முடியுமா? துடித்தாலும் போகுமா?

மனச்சோர்வும் மன மாச்சரியமும் மிஞ்சிப்போக, அவர்களுக்குள்ளே ஒருவித மனச்சாந்தியை வளர்த்துக்