பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்வெளிப் பேரிடர்கள் 9葛 வேண்டும். விண்வெளி விமானிக்கும், கூட்டு விமானிக்கும் ஆகாயவெளி.இராக்கெட்டுகளில் (Sky.rockets) போதிய பயிற்சி தரப் பெறுகின்றது. நெருக்கடி ஏற்படும் சமயங்களில் சரியும் விமானங்களில் (Glider) கீழிறங்கவும் இவர்கள் பயிற்சி பெறு கின்றனர். மின்சார அமைப்பு இயங்கத் தவறும் பொழுது : மின்சார சாதனங்கள் இயங்கத் தவறிஞல் விண்வெளி விமானத்தில் அதிகச் சிக்கல்கள் ஏற்படும். ஏனெனில், இவற்றிற்கு இரண்டாவது செட்டு சாதனங்கள் இருப்பதில்லே. இந் நிலையில் விமானத்தை மிகப் பாதுகாப்புடன் கட்டுப்படுத்தி மெதுவாகக் கீழிறக்கத் தொடங்க வேண்டும். விண்வெளியில் இவ் விபத்து நேரிடின் ஏனைய விமானங்கள் உதவிக்குச் செல்ல வழி வகைகள் செய்யலாம், தரையில் விமான நிலை யத்தில் உள்ளோரும் விமானி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகட்குச் செய்திகள் அனுப்பலாம். தீ விபத்தில் பாதுகாப்பு : தீ விபத்து நேரிட்டால் மூன்றடுக்கு இராக்கெட்டு விமானத்தினின்றும் தப்பித்துக் கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. முதல் அடுக்கில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை உடனே கழலச் செய்து தனியாகப் பிரித்துவிடலாம். இரண்டாவது அடுக்கில் விபத்து ஏற்பட்டாலும் அந்த அடுக்கினையும் கழற்றிவிட்டுத் தப்பித்துக் கொள்ளலாம். மூன்ருவது அடுக்கு விமானத்தைப் பாது. காப்பாக இறக்கிவிடலாம். எந்த அடுக்கில் விபத்து நேரிட் டாலும் அப்பொழுது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது விமானத் தலைவனின் துணிவையும் அவன் சரியாக முடிவெடுக்கும் திறனையும் பொறுத்தது. பெரும்பாலும் தீ விபத்து அரிதாகவே ஏற்படுகின்றன். விண்வெளியை இராக் கெட்டு அடையுங்கால் எரிபொருள்கள் குறைவாகவே இருக்கு. 2. 1967இல் - கென்னடி முனே யிலுள்ள தளத்தில் மூன்று: விண்வெளி வீரர்கள் பயிற்சி பெறுங்கால் பரிதாபகரமாக மரண மடைக்தது ஈண்டுகினேவு கூரத்தக்கது.