பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ {} தொலே உலகச் செலவு ميائهم பற்றி இன்னும் அறியப் பெருத புதிராகவே இருந்துவிடுகின்றது. சிலர் அவை கதிரவனிடமிருந்து வருவதாகக் கருதுகின்றனர். இன்னும் சிலர் எல்லையற்ற விண்வெளியினின்றும் அவை பாய்ந்து வருவதாகக் கூறுகின்றனர். கதிரியக்கக் கிளர்ச்சி புள்ள இக் கதிர்கள் சிறிது நேரம் விண்வெளி விமானி களையோ அல்லது அவர்கள் செல்லும் கூண்டினையோ தாக்கிளுல் அதனுல் யாதொரு கேடும் விளையாது என்று. கருதுகின்றனர் அறிவிலறிஞர்கள். வேறு நெருக்கடிகள் : எதிர்பாராமல் நேரிடும் நெருக்கடி காேல் சமாளிக்க இாக்கெட்டுப் பொறிஞர்கள் கவனம் செலுத்தியுள்ளனர். விமானத் தலைவனும் (Captain) கூட்டு. விமானியும் ஒரே சமயத்தில் இயக்கக் கூடிய இரண்டு செட்டு கருவி அமைப்புகள் உள்ளன. மற்றும் பம்பு அமைப்புகளில் நேரிடும் கோளாறுகளைச் சமாளிக்கவும் ஏற்பாடுகள் உள்ளன. முக்கியமாக (1) மின்சார அமைப்பில் நேரிடும் கோளாறு (2) தீ விபத்து (3) திடீரென்று அறைகளில் அழுத்தம் குறைதல் (4) விசைக் கருவியிலும் சுக்கானியிலும் (full) ஏற்படும் பொறியமைப்புக் கோளாறுகள் ஆகிய நான்கு வகை யான விபத்துகள் நேரிடலாம். இவற்றைச் சமாளிக்க. வழிவகைகள் செய்யப் பெறுதல் வேண்டும். இசாக்கெட்டு விமானம் பூமியிலிருந்து புறப்பட்டு நேர் உயரத்தில் கிளம்பும்பொழுது சில சமயம் எரிபொருள்களே வடிவச் செய்யும் குழல்கள் வெடித்து விபத்து நேரிடக் கூடும். இந் நிலே ஏற்படுங்கால் விண்வெளி விமானிகள் கூண்டி னின்றும் வெளியே வந்து இராக்கெட்டைக் கீழே இறக்க வேண்டும். இதஞல் இலட்சக்கணக்கான டாலர் செல்வில் அமைக்கப்பெற்ற இராக்கெட்டு அமைப்பும் விலைமதிப்பற்ற பொறியமைப்புகளும் காக்கப்பெறும். விமானிகள் நன்கு. பயிற்சி பெற்றிருந்தால் நிலைமைகளை எளிதாகச் சமாளிக்கலாம். பொறியமைப்புகளை கைவிடுவதா, அல்லது விபத்தினைத் தவிர்ப்பதா என்று விமானி சீர்தூக்கிப் பார்த்து ஒரு. நொடிக்குள் முடிவு எடுக்கக்கூடிய திறன் பெற்றிருத்தல்