பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்வெளிப் பேரிடர்கள் 83 அல்லது வேறு கோளாறுகளிளுலோ காற்று வெளியேறுவது தன்கு தெரியும். உடனே அப் பகுதியை அடைப்பதற்கு வழி செய்யலாம். பிறிதோர் உபாயத்தை மேற்கொண்டும் இம் மாதிரியான அபாயத்தைத் தவிர்க்கலாம். செயற்கைத் துணைக்கோள் கூண்டு செய்யப் பெற்றிருக்கும் உலோகத் தகட்டிற்கும் 'விண்கற்கள் பம்பர் தகட்டிற்கும் இடையில் தாமே ஒட்டி அடைத்துக் கொள்ளும் (Self-sealing) பொருளைப் பரப்பிவைக்க லாம். இத்தகைய ஏற்பாடுகளை மீறி விபத்துகள் நேரிட் டாலும் கூண்டிலுள்ளோர் உயிரியம் இல்லாக் குறையினுல் மரிப்பதைத் தடுக்க வேண்டும். அலுவலர் தமக்கெனத் தயாரிக்கப் பெற்றுள்ள விண்வெளி உடைகளே அணிந்து கொண்டு பாதிக்கப்பெற்ற பகுதிகளைப் பழுது பார்த்துக் குறைகளைப் போக்குவர். அண்டக்கதிர்கள் : விண்வெளியில் நாம் எதிர்பார்க்கக் கூடிய மற்ருெரு பேரிடர் அண்டக்கதிர்களால் நேரிடக் கூடியதாகும். 1911 இல் ஆஸ்திரிய அறிவியல் அறிஞர் விக்டர்ஹெஸ் (Victor Hess) என்பார் சில செய்திகளை வெளி யிட்டுள்ளார். எனினும், இக் கதிர்கள் அறிவியலறிஞர்கட்கு இன்றும் விளங்காப் புதிராகவே இருந்து வருகின்றன. முதல்நிலை அண்டிக் கதிர்கள் : (Primery cosmic rays)பெரும் பாலும் இவை பூமியின் மேற்பரப்பை அடைவதில்லை. இக் கதிர் களிலுள்ள புரோட்டான்கள் (Protons) என்னும் மின்துகள்கள் வளிமண்டலத்தில் சற்றேறக்குறைய 21,000 மீ. உயரத்தில் உறிஞ்சப் பெறுகின்றன. சிறிதளவு தான் 18,000 மீ. உயரத்தை அடைகின்றன. எனவே, 36,000 மீ. உயரத்திற்குமேல் செல்லும் விண்வெளி விமானி இக் கதிர்களின் தாக்கு தலுக்கு உட்பட நேரிடலாம் என்று கருதப்பெறுகின்றது. அண்டக் கதிர்களில் சிதறுண்டு அயனிகளாகும் (ions) பகுதியே அதிகக் கேடு பயக்கக் கூடியது. இக் கதிர்களின் மூலம்