பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 தொலே உலகச் செலவு இராக்கெட்டுப் பொறிஞர்கள் பல்வேறு யுக்திமுறைகளைக் கையாளுகின்றனர். டாக்டர் விப்பிள்' என்பார் விண்கல் பம்பர்’ (Meteor bயாper) என்ற சாதனத்தை அமைத்து இந்த விபத்தினைத் தடுக்கலாம் என்று யோசனை கூறுகின் ருர். கூண்டின் சுவரைப் பல் அடுக்குத் தகடுகளால் அமைப்பதே இம் முறையாகும். சாதாரணமாக விண்கற்கள் மிகச் சிறியவையே யாதலின், அவை இந்த அடுக்கு அமைப்பில் பட்டுத் தெறித்துப் போய்விடுகின்றன. இந்த அதிர்ச்சியும் அடுக்குகளுக்கிடையே உள்ள வெளியில் பரவுவதனுல் கூண்டினுள்ளிருப்போர் சிறிதும் பாதிக்கப் பெறுவதில்லை. சில விண்கற்கள் தகடுகளைத் துளைக்க நேரிட்டாலும் அவை மற்றைத் தகடுகளிடையே சிக்கிக் கொண்டு விடும். சாதாரண மாகக் கூண்டினைத் தாக்கும் விண்கற்களில் 99 சதவீதம் சிதறி விடுவதாகக் கருதுகின்ருர் டாக்டர் விப்பிள். பெரிய விண் கற்கள் மிகக் குறைவாதலின் செயற்கைத் துணைக் கோளோ அல்லது விண்வெளி நிலையமோ இவற்றின் தாக்குதல்கட்கு உட்படாது என்று கருதலாம். மேற்கூறிய விபத்தினைத் தடுக்க இன்னுெரு யுக்திமுறை யையும் கையாளலாம். போர் விமானங்களில் எரிபொருள் இருக்கும் பகுதிகட்கு விபத்து ஏற்பட்டால் அவை தாமே சீர்பட்டு மூடிக் கொள்ளும் அமைப்புமுறை உள்ளது. இதற்காக ஒவ்வோர் அறையிலும் சிறிய அழுத்தமானி யொன்று பொருத்தப் பெற்றிருக்கும். இந்த அறையிலுள்ள காற்றின் அழுத்தம் குறையுங்கால் உடனே சில கருவி அமைப்புகள் தாமாக இயங்கி இப் பகுதியின் கதவுகளைத் தாமாக இறுக மூடிக்கொள்ளச் செய்துவிடும். இத்தகைய ஏற்பாட்டினை இங்கு மேற்கொண்டு விபத்துகளைத் தவிர்க்க லாம். இதைத் தவிர, நெருக்கடி நேரிடுங்கால் காற்றைச் செலுத்தி ஓரளவு அழுத்தத்தை உண்டு பண்ணவும் ஏற்பாடு செய்யப் பெற்றுள்ளது. தீங்கு பயக்கா நிறத்துடன் கூடிய வாயுவை நிரப்பினுல், விண்கற்களின் தாக்குதல் விளைவாகவோ f. Dr. Whipple.