பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்வெளிப் பேரிடர்கள் 8? வாயில்கள், சாளரங்கள் கூண்டினுள் அமைக்கப் பெற்றிருக்கும். இவை இரண்டடுக்குகளுடன் கூடிய சாதனங்களாகும். இவற்றில் 'ஏர் , லாக்' (Air – lock) வசதிகளும் இருக்கும். விபத்துகளின் விளைவுகளைக் குறைப்பதற்காகப் பல அறைகள் அமைக்கப் பெற்றிருக்கும். எனினும், ஏதாவது ஓர் அறையி லிருந்து காற்று வெளியேற நேரிட்டால் அழுத்தக் குறைவு ஏற்பட்டு அங்குள்ளார் மூச்சுத் திணறலுக்குட்பட்டும் வெற்றிடச் சூழ்நிலைக்குள்ள விளைவுகள் ஏற்பட்டும் மரணம் அடைய நேரிடும். இதையும் தவிர்க்க ஏற்பாடுகள் செய்யப் பெறுதல் வேண்டும். விண்கற்கள் : விண்வெளியில் நேரிடும் பேரிடர்களுள் விண்கற்களால் (Meteors) நேரிடுவனவற்றைக் குறிப்பிடலாம். கணந்தோறும் இலட்சக்கணக்கான விண்கற்கள் அதிவேக மாகப் பூமியை நோக்கி வீழ்ந்து கொண்டுள்ளன. கோள்களைப் போலவே கதிரவனைக் கோடிக்கணக்கான சிறுசிறு உருண்டைகளும் துணுக்குகளும் சுற்றி வருகின்றன. அவற்றுள் சில சிலசமயம் விடுதலையடைந்து பூமியின்மீது பாய்கின்றன. சிலசமயம் பூமியும் அவற்றினிடையே பாய்ந்து செல்ல நேரிடுகின்றது. இந்த இரண்டு சமயங்களிலும் அத் துணுக்குகள் பூமியின் கவர்ச்சி ஆற்றலில் சிக்குண்டு, வளிமண்டலத்தில் புகுந்து, உராய்வுற்று, நெருப்பாக மாறி, மின்னலைப்போன்று ஒரு விநாடி மின்னி மறைந்து போகின்றன. ஏதாவது ஒன்றிரண்டு விண்கற்கள் எப்பொழு தாவது பூமியின் மீது விழலாம். இவை விநாடிக்கு 64 கி. மீ. வேகத்தில் பாய்ந்து செல்வதாகக் கணக்கிட்டுள்ளனர். நாள்தோறும் சற்றேறக்குறைய 7,30,000 விண்கற்கள் பூமியின் மீது விழுவதாக வானநூற்புலவர்கள் மதிப்பிட்டுள்ளனர். செயற்கைத் துணைக்கோள் விண்கற்களால் தாக்கப் பெற்றுத் துளைக்கப் பெறின் கூண்டினுள் இருக்கும் காற்று ஒருசில விநாடிகளில் வெளியேறிவிடும் ; கூண்டினுள்ளிருக்கும் விண்வெளி விமானியும் மூர்ச்சையாகி விழுந்துவிடுவான். இங்ஙனம் ஏற்படும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக