பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. விண்வெளிப் பேரிடர்கள் இராக்கெட்டு விமானத்தில் செல்வோர்கட்குத் தாம் புறப்பட்டது முதல் விண்வெளியில் செல்லும் வரையிலும் அதன்பிறகு அவர்கள் இந் நில உலகிற்குத் திரும்பும் வரை யிலும் பல பேரிடர்கள் நேரிடலாம். அவற்றைச் சமாளிக்கும் முறைகளை முன்னரே திட்டமிட்டுக் காத்துக்கொள்ள வழி வகைகளே அமைத்துக் கொள்ளல்வேண்டும். வந்தபின் காப்பதைவிட வருமுன் காப்பது சிறந்ததல்லவா ? அத்தகைய பேரிடர்களையும் அவற்றைச் சமாளிக்க மேற்கொள்ளும் ஏற்பாடுகளையும் ஈண்டு அறிவோம். சூழ்நிலைப் பாதுகாப்பு : விண்வெளி காற்றில்லாத வெற்றிட பாகும். அந்த மெளனவப் பெருவெளியில் கடுங்குளிர், அழுத்தமின்மை, வாயுவில்லாத சிரமம், அண்டக்கதிர்கள், புறஊதாக் கதிர்கள், விண்கற்கள் முதலிய இடையூறுகளைத் தவிர்த்தாக வேண்டும். தவிரவும், அந்த வெற்றிடக் சூழ்நிலையில் மனிதனது குருதி கொதிக்கத் தொடங்கி அவன் உயிர் துறக்கவும் நேரிடும். இதனால், பூமியில் அவன் வாழும் சூழ்நிலையே கூண்டினுள் அமைதல்வேண்டும். எனவே, செயற்கைத் துணைக்கோளாகிய கூண்டினுள் வளிமண்டல அழுத்தத்தில் காற்று அடைக்கப் பெற்றிருக்கும். வெப்பநிலை 65°F இருக்குமாறு செய்வதற்கேற்ற குளிர் சாதன அமைப்பு கூண்டினுள் பொருத்தப் பெற்றிருக்கும். ஈயத் தகடு கதிர் வீச்சினைத் தடுக்க வல்லதாகையால் கூண்டின் சுவரில் ஈயத்தகடுகள் பல அடுக்குகளில் பதிக்கப் பெற்றிருக்கும். விண்வெளி விமானங்களில் உள்ளே செல்வதற்கும் வெளியே வருவதற்கும் உள்ளிருந்துகொண்டே விண்மீன்கள், கோள்கள் முதலியவற்றைக் கவனிப்பதற்கும் சிறப்பான