பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறகோள்களின்மீது கவனம் 85 கதிரவன் மண்டலத்தில் அதிகத் தொலைவிலுள்ள பிற கோள்கள் நமக்குச் சிறிதும் விளங்காத புதிர்களாகவே உள்ளன. பிறகோள்களில் . முதலில் செவ்வாயிலும் வெள்ளி யிலும் - தானியங்கிக் கலன்களைத் தரையில் இறங்கச் செய்வது தான் கதிரவன் மண்டல ஆராய்ச்சியின் முக்கிய கட்டமாக அமையும். இது சாத்தியமாவதற்கு முன்னதாகப் புதிய அறிவியல் திட்டம் புனையும் பிரச்சினைகள் பலவற்றிற்குத் தீர்வு காணல்வேண்டும். விண்வெளியில் நிரந்தரமான சுழலும் நிலையத்தை அமைத்த பிறகு பல பிரச்சினைகட்குத் தீர்வு காணப்பெறும். பிறகோள்கட்குப் பயணம் செய்வதற்கான முறைகளை வகுக்கவும், விண்வெளியாளர்களைப் பயிற்றுவிக்கவும் பல வாய்ப்புகள் அமையும். கோள்களுக்கான பயணங்களும் பூமியிலிருந்து மேற்கொள்ளாமல், இந்த விண்வெளி நிலையங்களிலிருந்தே தொடங்கும். விண்வெளி நிலையங்கள் இப் பயணங்களை எளிதாக்கும் என்பதை நாம் எதிர் பார்க்கலாம்.