பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தொலை உலகச் செலவு ஆராய்ச்சி இனிமேல் நடத்தப்பெறவிருக்கும் ஆராய்ச்சி களுக்கு வேண்டிய தொழில்நுட்பத்தை உருவாக்க உதவும் ; "செவ்வாயில் உயிரினம் இருந்ததா, இருக்கமுடியுமா ?” என்பதை ஆராய்ந்தறிய உதவும். ஒவ்வொரு துணைக் கோளிலும் இரண்டு தொலைக்காட்சிக் காமிராக்கள் உள்ளன. இவை செவ்வாயை நெருங்குங்கால் அந்தக் கோளின் முழு வட்டத்தையும் படம் பிடிக்கும் ; பின்னர் அதனைக் கடந்து செல்லுங்கால் அதன் நிலப்பரப்பைப் படம் பிடிக்கும். நெருங்கும்பொழுது எடுக்கும் படங்களில் மிகத் தெளிவானவை 24 கி. மீ. குறுக்களவுள்ளவற்றையும் காட்டும்; பூமியிலிருந்து பார்த்து எடுத்த படங்களில் மிகச் சிறந்தவையும் 160 கி. மீ. குறுக்களவுக்குக் குறைந்தவற்றைக் காட்டுவதில்லை. நிலப் பரப்பைக் காட்டும் படங்களில் மிகத் தெளிவானவை ஏறக் குறைய 21 மீ. குறுக்களவுள்ளவற்றையும் காட்டும். ஆளுல், 1965இல் மாரினர்-4 எடுத்த படங்கள் 3.2 கி. மீ. குறுக்கள வுள்ள பொருள்களைத்தாம் காட்டின. செவ்வாயின் வளிமண்டலத்தை ஆராய்வதற்கு மாரினர் கோள்களில் அகச்சிவப்பு நிறமாலை காட்டி (Infrared spectrometer), uppstāk spinn? GILų (Ultraviolet spectrometer) srsërp இரண்டு கருவிகள் பொருத்தப் பெற்றுள்ளன. மாரினர் கோளிலிருந்து புறப்பட்டுச் செவ்வாயின் வளிமண்டலத்தின் ஊடே நுழைந்து வரும் வானெலி அலைகளில் உண்டாகும் மாறுதல்களை அளவிட்டு அந்த வளிமண்டலத்தின் அடர்த்தி, அழுத்தம் ஆகியவை அறுதியிடப் பெறும். மேலும் அகச்சிவப்பு irogo baro (Infrared radiometer) srs; p =(553 orgy செவ்வாயின் பகல் பக்கத்திலும் இரவுப் பக்கத்திலும் நிலப் பரப்பின் வெப்பநிலையை அளக்கும். செவ்வாயின் இரவுப் பக்கத்தைப்பற்றி அறிவியல் தகவல் திரட்டுவது இதுவே முதல் தடவையாகும். இன்று சென்றுள்ள இரண்டு மாரினர் கோள்களும் செவ்வாயை மட்டிலுமே ஆராயும் கருவிகளையே கொண்டுள்ளன ; வழியில் வேறு ஆராய்ச்சிகளை நடத்தக் கூடிய கருவிகள் இவற்றில் பொருத்தப் பெறவில்லை.