பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்வெளிப் பேரிடர்கள் 93. பூமிக்குமேல் 1720 கி. மீட்டர் உயரத்தில் விண்வெளி நிலையம் அமைக்கப் பெறுவதைப் பற்றிக் கூறிளுேமல்லவா? நெருக்கடி நேரிடுங்கால் விண்வெளிக் கப்பலே இந்த நிலைய மொன்றில் இறக்கித் தங்கள் விண்வெளிக்கப்பலைப் பழுது பார்த்துக்கொண்டு அதன்பிறகு தங்கள் பயணத்தைத் தொடங்கலாம். பொறியமைப்பில் கோளாறுகள் : விண்வெளியில் இக் கோளாறுகள் ஏற்பட்டாலும், அல்லது விண்வெளி விமானி' களின் உடல்நிலை பாதிக்கப் பெறினும், அல்லது நிலை தடுமாறி ஞலும், நிலைமைகளைச் சமாளிக்க முடியாது எனத் தோன்றி. லுைம் அவர்கள் வெளியேறுவதைத் தவிர வேறு வழி இல்லை. அப்பொழுது அவர்கள் தங்களுடைய கூண்டுகளில் இருந்து கொள்ள வேண்டும். கூண்டுகள் மூடிக்கொண்டதும் அவற்றி லுள்ள சில அமைப்புகள் மூலம் வேகமாகச் செல்லும் விண் வெளிக் கப்பலிலிருந்து மிகத் தொலைதுாரத்திற்கு அக். கூண்டுகள் தூக்கி எறியப் பெறுகின்றன. வளிமண்டலத்தை அடைந்ததும் விண்வெளி வீரர்கள் தேவையான வாயு அழுத் தத்திற்கு உட்படுத்தப்பட்டுக் காப்பாற்றப் பெறுகின்றனர். கூண்டுகளின் அடிப்பகுதியில் கனமற்ற மெல்லிய உருக்குக் கம்பியாலான குதிகொடை (Parachute) உள்ளது. இது விரிந்து கூடுகளின் வேகத்தை மெதுவாகக் குறைத்து அவற்றைக் கீழே இறக்குகின்றது. கூண்டில் வெப்பம் கடத்த அமைப்பு (insulation) இருப்பதால் கூண்டு வளிமண்டலத்தில் உராய் வதால் உண்டாகும் அதிக வெப்பத்தினின்றும் விமானிகள் பாதுகாக்கப்பெறுகின்றனர். பூமியின் அருகில் வந்ததும் கூண்டில் பொருத்தப்பெற்றுள்ள தாமாக இயங்கும் இராக் கெட்டு மோட்டார் இயங்கி சிறிதும் அதிர்ச்சி ஏற்படாமல் கூண்டு தரையில் இறங்கி நின்றுவிடுகின்றது. சில சமயம்