பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 தொலை உலகச் செலவு கூண்டு கடலில் இறங்க நேரிட்டால் அது மிதக்கும். உடனே தாமாக இயங்கும் வானெலி அமைப்பின் மூலம் அருகிலிருக்கும் கப்பல்கள் அல்லது படகுகட்குச் செய்திகள் எட்டுகின்றன. அவை விரைந்து ஏகிக் கூண்டிலுள்ளவர்களைக் காப்பாற்று கின்றன. ஏனைய அமைப்புகள் இயங்கத் தவறினுலும் இக் கூண்டுகள் தவருது இயங்குவதற்குத் தக்க ஏற்பாடுகள் உள்ளன. இதுகாறும் சென்ற விண்வெளி வீரர்கட்கு இவ் வகையான தப்பும் வழியை மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படவே இல்லை.