பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 . . விண்வெளியில் உயிர்கள் விண்வெளியில் நூற்றுக்கணக்கான செயற்கைத் துணைக் கோள்களை அனுப்பி அச் சூழ்நிலையிலுள்ள பல்வேறு செய்திகளே அறிந்துள்ளனர் என்பதை முன்னர்க் கண்டோம். பூமியில் கண்டிராத வியத்தகு சூழ்நிலைகளைப்பற்றி ஆராய்ச்சித் துணைக்கோள்கள் அறிவித்துள்ளன என்ற விவரங்களையும் அறிந்தோம். இதல்ை, விண்வெளிச் செலவு பல்வேறு இடையூறுகளும் சிக்கல்களும் நிறைந்தது என்பதை உணர் கின்ருேம். இவற்றையெல்லாம் நமக்கு அறிவித்த தானியங்கு அறிவியல் கருவிகள் அறிவியல் முன்னேற்றத்தின் சிறப்பான அறிகுறிகளாக உள்ளன என்பது உண்மையே. ஆயினும், மனிதன் விண்வெளிக்குச் சென்று திரும்பினுல்தான் விண்வெளி வெற்றி முற்றுப் பெற்றதாகக் கருதலாம். கருவிகளால் அறிவிக்கப் பெறும் எடுகோள்களைக் கொண்டு விண்வெளியில் தோன்றக் கூடிய எதிர்பாராத சூழ்நிலைகளை ஆராய்தல் முடியாது ; எக் கருவிகளாலும் அவற்றைத் தெரிந்து கொள்ளவும் இயலாது. அறிவு படைத்த மனிதனும் நுட்பமான அறிவியல் கருவிகளும் சேர்ந்துதான் எதிர்பாராது தோன்றுபவற்றைக் கண்டறியலாம் ; அப்போதுதான் விண்வெளி பற்றிய முழு விவரங்களையும் நாம் அறியலாம். இரஷ்யாவும் அமெரிக்காவும் இம் முயற்சியில் ஈடுபட்டன. முன்னதாக அந் நாட்டார் நாய், குரங்கு, சுண்டெலி போன்ற உயிர்ப் பிராணிகளையும் பொம்மை மனிதனையும் அனுப்பி விண்வெளியில் நேரிடும் இடையூறுகளையும் அபாயங்களேயும் எங்ங்னம் தாக்குப் பிடிக்கலாம் என்பதைத் திட்டமாக அறிய விழைந்தனர். இரஷ்யா அனுப்பிய ஸ்பூக்னிக்-2 என்ற துணைக்கோளில் லேக்கா (Laika) என்ற நாய் பயணியாக இருந்தது. அது சிறிய எலும்புகளைக்கொண்ட ஓர் எஸ்கிமோ