பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 தொலை உலகச் செலவு இனத்தைச் சேர்ந்த வலிமை பொருந்திய பிராணியாகும். விண்வெளிச் செலவில் உயிரினங்கள் எங்ங்ணம் பாதிக்கப் பெறும் என்பதைக் கண்டறிவதற்காகவே நாய் அதில் வைக்கப் பெற்றது. அஃது ஒரு காற்று கட்டுப்பாட்டு அமைப்பும் உணவும் கொண்ட ஒரு தனி அறையில் வைக்கப் பெற்றிருந்தது. நாயின் இதயத் துடிப்பு. குருதியோட்டம், குருதி அழுத்தம், மூச்சு விடும் வேகம் ஆகியவற்றைப் பதிவு செய்யும் கருவிகள் அவ்வறையில் பொருத்தப் பெற்றிருந்தன. இக் கருவிகள் அறிவிக்கும் எடுகோள்களைத் தரையி லிருப்போருக்குத் தெரிவிக்க ஸ்பூத்ணிக்கின் வானுெலி அமைப்புடன் இக் கருவிகள் இணைக்கப் பெற்றிருந்தன. துணைக்கோளைத் தாங்கிச் சென்ற இராக்கெட்டின் வேக வளர்ச்சியால் நாய் அறையின் அடித் தளத்தில் அதிகமாக அழுத்தப்பெற்றது. நாய்க்கு எடை மிகுதி ஏற்பட்டுக் குருதிக் குழல்கள் அழுத்தப் பெற்று அதன் இதயத் துடிப்பு மும்மடங்காக உயர்ந்தது. சுவாசிக்கும் வேகமும் அதிகரித்தது. ஸ்பூத்ணிக் சுற்றுவழியை அடைய எடுத்துக்கொண்ட மூன்று நிமிட கால அளவில் நாய் மேற்குறிப்பிட்ட தொல்லையை அனுபவித்தது. ஸ்பூத்ணிக் சுற்றுவழியை அடைந்ததும் நாயின் இதயத் துடிப்பு, சுவாசிக்கும் வேகம் ஆகியவை வரவரக் குறைந்துகொண்டே வந்தன. ஆயின், ஐம்பத்து நான்கு சுற்றுகட்குப் பின்னர் லேக்கா உயிரை நீத்து இதுகாறும் மனித முன்னேற்றத்திற்கு மேற்கொள்ளப் பெற்ற பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகளில் உயிர்நீத்த தாய்த் தியாகிகளின் வரிசையில் சேர்ந்தது. இந்தச் சோதனையில் உயரச் செல்லுங்கால் நாய் உயிருடன் இருந்தது என்பது முக்கியமான நிகழ்ச்சியன்று. ஏனெனில், இது நடைபெற்ற ஏழு ஆண்டுகட்குமுன்னரே அமெரிக்கர்கள் இரண்டு குரங்குகளையும் இரண்டு சுண்டெலி களையும் 88 கி.மீ. உயரத்திற்குக் கொண்டு சென்று உயிருடன் மீட்டுள்ளனர். இரஷ்யர்களும் 96 கி. மீ. உயரத்திற்கு அதே நாய்களைத் திரும்பத் திரும்ப அனுப்பி வெற்றி கண்டுள்ளனர்.